Jun 16

சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட நபர் உயிரிழப்பு


கொழும்பு குற்றத்தடுப்பு கபிரிவினால் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நோய் நிலமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் நேற்று (15) 1 கிராம் ஐஸ் போதைப்பொரளைுடன் வெல்லலம்பிட்டிய, நாகமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

இதன்போது சந்தேக நபர் கைது செய்வதற்கு முன்னர் தன்னிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் பெக்கட்களை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அதனடிப்படையில் சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பின்னர் உயிரிழந்துள்ளார். 

38 வயதுடைய நாகமுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.