Mar 28

உடை விவகாரத்தால் இரு பெண்களுக்கு அனுமதி மறுப்பு

அமெரிக்காவில் டென்வரில் இருந்து மின்னபொலிஸ் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்ய இரு இளம் பெண்கள் வந்தனர்.

அப்போது அவர்கள் இறுக்கமான லெக்கின்ஸ் உடை அணிந்து இருந்தனர். எனவே அவர்கள் அந்த விமானத்தில் பயணம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் ஏஜெண்ட் தடை விதித்தார்.

அவர்களிடத்தில் வேறு உடை இருந்தால் அதற்கு மேல் வேறு ஆடை அணிந்து செல்லுமாறு கூறினார். அப்பெண்ணிடம் வேறு உடை இல்லாததால் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இதேபோன்று லெக்கின்ஸ் அணிந்து வந்த மற்றொரு இளம் பெண்ணும் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் வேறு உடை அணிந்ததால் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்புக்காக தான் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எங்களது விமானங்களில் பயணம் செய்பவர்கள் செருப்பு இல்லாமல் வெறுங்கால்களுடனோ, அல்லது உரிய ஆடை அணியாமல் இருந்தாலோ பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என்றார்.