Jun 15

மதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் ! மட்டுநேசன்

இலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும் முன்னர்அடுத்த காட்சி அரங்கேறி விடுகின்றது. அடுத்து நடக்கக்கூடிய ஏதாவது தேர்தல்கள் வரைஇவை தொடரலாம்.

இரு முஸ்லிம் ஆளுநர்களையும் ஓர் அமைச்சரையும் பதவி விலகக் கோரி மிரட்டி பௌத்த பிக்குஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாகஅவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவர்கள் இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டமை ஒருஜனநாயக விரோதப் போக்கு.

உண்மையில், அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள்இருக்கும்பட்சத்தில் அவை குறித்து உரிய முறைப்பாடு செய்யப்பட்டு, அவை விசாரிக்கப்பட்டுஅவர்கள் பதவி விலக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக எந்த விசாரணையும்இன்றி அவர்கள் பதவி விலகக் கோரப்பட்டனர். ஜனாதிபதியும், பிரதமரும் கைவிட்டநிலையில்இரு ஆளுநர்களும் பதவி விலகினர். இது மிகப்பெரும் ஜனநாயக விரோதச் செயல்.

அதற்குப் பதிலாக ஆட்சியில் இருந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவ தாகஅறிவித்தனர். அது பாராட்டப்பட வேண்டியது - முன்னுதாரணமானது. அவர்களுக்கு தமிழ்கட்சிகளும் ஆதரவு தந்தனர் - அதுவும் பாராட்டத்தக்கது. பெரும்பான்மையினரின் மிரட்டலுக்குமுன்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தந்த ஆதரவு அது. இதற்குமுன்னதாக தமிழர்கள் சிக்கலில் இருந்தபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறு ஆதரவுதந்ததாக அண்மையில் எனக்கு ஞாபகமில்லை.

அது நிற்க.இங்கு இன்னுமொரு விடயத் தையும் பார்த்தாக வேண்டும். எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும்ரவூப் ஹக்கீம் ஆகியோர் குறித்த விடயம் அது. ஆனால், இது அவர்கள் மீது பயங்கரவாதக்குற்றச்சாட்டை சுமத்துவது பற்றியல்ல. அரசியல் அறம் குறித்த கேள்விஇது.

ஹிஸ்புல்லாஹிஸ்புல்லா அவர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் அவருக்கு எதிரானஏனைய பல குற்றச்சாட்டுக்கள் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டபோது, அவர் ஆளுநராகநியமிக்கப்பட, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு தரப்பு மக்களால்முன்வைக்கப்படும் இவை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் விளக்கமளிக்கவேண்டும் என்று“அரங்கம்” பத்திரிகையில் கேட்டிருந்தோம். கிழக்கில் இருந்து வரும் ஒரே வாரப் பத்திரிகையானஅரங்கத்தின் கேள்விகள் குறித்து அவர்செவிமடுக்கவில்லை.

நாங்கள் அவர் மீதுகுற்றஞ்சாட்டவில்லை. மக்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றுகேட்டிருந்தோம். ஆனால், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.ஆனால், சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு உள்ளாகவே அந்த விடயம் குறித்துவிளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அதுவும், பயங்கரவாதத்தாக்குதல்கள் நடந்த நிலையில் அவை குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமுகமாக அவர் அதனை செய்தார். அதுவும் ஒரு வீடியோ மூலம். அது அவருக்கு ஒருபலத்த பின்னடைவு. ஆனால், முன்னதாக ஆளுநரான தருணத்தில், நாம் கேட்டபோது அவர்அதனைச் செய்திருந்தால் கிழக்கு மக்களுக்கு அவர் கொடுத்த விளக்கமாக, கௌரவமாக அதுபார்க்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது அதனால் அவர் அவமானம் அடைந்திருக்கிறார்.

ஜனநாயகத்துக்குப் புறம்பாக மிரட்டப்பட்டுள்ளார். அவர் இவ்வாறு அரசியல் ரீதியாகமிரட்டப்பட்டதை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால், தான் நியாயமாகச் செய்ய வேண்டியதைஉரியவேளையில் செய்யாததால் அவரே எதிர்பாராமல் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

(ஆனால், அந்த வீடியோ மூலம் அவர் கொடுத்த விளக்கம் முழுமையானது அல்ல.)ரவூப் ஹக்கீம்அடுத்தது ரவூப் ஹக்கீம் அவர்கள் குறித்த விடயம். பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பெரிதாகவிமர்சனங்களுக்கு உள்ளாகாதவர் அவர். சிங்களவர்களும் அவரை பெரிதும் விமர்சித்ததுகிடையாது. ஆனால், கடந்த காலங்களில் நடந்த சில விடயங்களை இங்கு நாம் மீட்டிப் பார்க்கவேண்டியுள்ளது.

இலங்கையின் இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதானகுற்றச்சாட்டுக்கள் குறித்த விவாதங்களில் இலங்கை அரசின் சார்பில் கலந்துகொண்டுஇலங்கை தரப்புக்காக ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதித்தவர்இவர். இலங்கையில் இறுதிப்போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று வாதிட்டவர்.

அது குறித்து ஒரு தொலைக்காட்சிச் செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்தான் இலங்கையின் நீதி அமைச்சராகவே அங்கு செயற்பட்டதாகவும், முஸ்லிம் காங்கிரஸ்கட்சியின் சார்பில் செயற்படவில்லை என்று பதிலளித்தார்.அவருக்கு உண்மையில் நியாயமற்றவற்றை விவாதிக்கும்போது தன்னை மறைக்கத் தெரியாது.

அவர் வாதமே மிகவும் பலவீனமாக இருந்தது. அவரது முகமே அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது.ஜெனிவாவில் தமிழ் மக்கள் தமது மனித உரிமைகள், இலங்கைஇறுதிப்போரில் நிராகரிக்கப்பட்டதாக குரலெழுப்பிய இடத்தில் அதனை எதிர்த்து வாதிடச்சென்ற அவர், இப்போது, தனது இனம் ஜனநாயகமீறல்களைஎதிர்கொள்கிறது,துன்புறுத்தப்படுகின்றது, தாக்கப்பட்டது என்று கூறி பதவி விலகும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளார்.

சட்டப்படி அன்று அவர் தொலைக்காட்சியில் வாதிட்டபோதும், பின்னர்பதவி விலகுவதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதும் சிறப்பாகச் செயற்படத்தான்முயன்றார். ஆனால், அவரது அரசியலின் அறம் அங்கு பிறழ்ந்து விட்டது. இது அவரது அரசியல்வாழ்வில் ஓர் இழுக்கு.

அதனை அவர் சரி செய்தாக வேண்டும். தனது இனத்தைச் சேர்ந்த மூன்றுசக அரசியல்வாதிகளுக்காக பதவி விலகியதன் மூலம் அவர் எந்த அளவுக்குமேன்மையானவராகப் பார்க்கப்பட்டாரோ, அந்த அளவுக்கு அவர் அரசியல் நியாயம்தளர்ந்தவராகவும் இனி பார்க்கப்படுவார்.

இவ்வாறு கிழக்கில் இருந்து வெளியாகும் அரங்கம் வார இதழின் ஆசிரியர் பூபாலரட்ணம்சீவகன் தெரிவித்துள்ளார். ‘யாரும் சரியில்லை! நியாயம் புரிபடும் காலம் இது”, என்றதலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியே இது.

இன்று முஸ்லிம்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் எனமகாநாயக்கர்கள் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சிறுபான்மை இனத்தவர்தொடர்பாக இதுவரையில் மகாநாயக்கர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு மாறாக இவைஇருப்பது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது ரவூப் ஹக்கீம்நீதியமைச்சைப் பெறுப்பேற்குமாறு கேட்கப்பட்டால் அவர் என்ன செய்வார்? உயிர்த்த ஞாயிறுசம்பவங்களுக்குப் பின்னர் நடந்த விடயங்களில் அவரது வார்த்தைகளில் கூறுவதனால்நீதியமைச்சராக நடந்து கொள்வாரா? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக நடந்துகொள்வாரா? நீதியமைச்சராக நடந்து கொண்டால் அவரது அரசியல் வாழ்வு முடிவுக்குவந்துவிடலாம்.

தமிழர் இனவழிப்பு விடயத்தில் மனச்சாட்சியுடன் நடந்துகொள் ளாததுபோலவே, இதுபோன்ற இன்னும் எவ்வளவு அழிவுக்குப் பின் உண்மையை அவர்ஏற்றுக்கொள்ளப் போகிறார்?

கடந்த மாகாண சபைத் தேர்தலில் மஹிந்தவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கவில்லை இவர்.முஸ்லிம் ஒருவரை முதல்வராக்குகிறோம் எனக் கூட்டமைப்புக் கேட்டபோதும் அந்தவேண்டுகோளை உதறித் தள்ளிவிட்டு மஹிந்தவுடன் இணைந்தவர். மஹிந்த ஜனாதிபதித்தேர்தலில் தோற்றவுடன் அவரைக் கைவிட இவர் தயங்கவில்லை. தமிழத் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியமைக்ச் சம்மதித்தார்.

எப்போதும் சக சிறுபான்மையினரின்வேண்டுகோளை விட அதிகாரத்தில் இருப்பவரின் நட்பையே விரும்புபவர் இவர். தனதுதேவைக்காக யாரையும் கழற்றி விடத் தயாரான தலைவராகவே இப்போதும் காணப்படுகிறார்.

2006 மார்ச் 30 இல் நடந்த உள்ளுராட்சி தேர்தலில் திருமலை நகர சபைக்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டது. இதனை எதிர்த்து ஐ.தே.க. மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிசுயேச்சையாக போட்டியிட்டன. இக்குழுவில் மு.கா.வும் இணைந்து கொண்டது.

எப்போதுமேசிங்களவர் பக்கமே முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். பரிதாபம்என்னவெனில் சிங்களக் கட்சிகளின் சார்பில் ஒவ்வொருவரும் கூட்டமைப்பின் சார்பில்ஒருவருமே முஸ்லிம்கள் தெரிவாக முடிந்தது.

2002 - 2006 சமாதானப் பேச்சுக் காலத்தில் வெளிநாட்டுக்கு அரசுத் தரப்பில் சென்ற முஸ்லிம்பிரதிநிதி ஒருவர் புலிகளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். நாங்களும் தமிழ் பேசும் மக்கள்என்ற வகையில் உங்கள் தரப்பில் எங்களது பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்”, எனக்குறிப்பிட்டார். அதற்குப் புலிகள், ‘அது பிரச்சினை இல்லை. இரு தரப்பில் நீங்களேபேசிக்கொள்ளுங்கள். நாங்கள் போகிறோம்”, எனப் பதிலளித்தனர்.

அடுத்தது ஹிஸ்புல்லா!

முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்கிய தனது சாதனை பற்றி இவர் தெரிவிக்கும் கருத்துக்கள்காணொலிகளாக வெளிவந்தன. பின்னர் ஜிகாத் போன்ற அமைப்புகள் ஆயுதங்களைஒப்படைப்பதாக வெளிவந்த காணொலிகளிலும் இது தொடர்பான ஏற்பாட்டாளராக இவரேகாணப்படுகின்றார். சட்டபூர்வமற்ற இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி அரசுத்தரப்பும் கவலைப்படவில்லை. தமிழருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்வரைஎல்லாம் சுபமே!

வவுணதீவில் இரு பொலிஸார் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி சிலவேளைமுன்னர் இவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். எனினும் இச்சம்பவம் தொடர்பாகமுன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கொடுப்புக்குள் சிரித்தோரில்இவரும் அரசிடம் ஊதியம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் 27 பேரும் அடங்கமாட்டார்கள் எனஎவராவது நம்புவார்களா?

ஞானசார தேரரின் விடுதலை இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றார்இவர். வவுணதீவு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோரின் குடும்பங்கள் என்னபாடுபட்டிருக்கும் என இவரது மனச்சாட்சி உறுத்த வில்லையா? 200 வருடங்கள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரகுபதி சர்மா தொடர்பாக மௌனமாக இருந்தமை தமிழர்விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது அல்லவா?இன்று இலங்கையில் நாம்சிறுபான்மையினர். எனினும் உலகில் நாமே பெரும்பான்மையினர். எனவே எம்மை எவரும்இலகுவில் அடக்கிவிட முடி யாது என்ற இவரது வீறாப்பு வேறு.

இன்னமும் அரேபியமுஸ்லிமாகவே தன்னை வெளிப்படுத்த முனைகிறார். உலகில் தாம் பெரும்பான்மைஎன்பதற்காகவா மன்னாரில் 508 ஏக்கர் காணி, வாகரையில் கடற்புலிகள் பயன்படுத்திய காணிஎன வட,கிழக்கில் பெரும்பான்மை காணி வாங்கிய அரசியல்வாதியாக விளங்க முனைகிறார்இவர்? தமிழருக்கு இந்நடவடிக்கை அச்சமூட்டுவது இயல்புதான்.

இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் பாளி மொழி கற்கிறார்கள். கத்தோலிக்க மத குருமார்இலத்தீன் கற்கின்றனர். இந்து மத குருமார் சமஸ்கிருதம் கற்கின்றனர்.

இவை குறிப்பிட்டதேவைக்காகவே. அந்தந்த மதத் தலங்களுக்கு அப்பால் இம்மொழிகள்பயன்படுத்தப்படுவதில்லை. நாட்டில் அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ், ஆங்கிலம்மட்டுமே அறிவிக் கப்பட்டுள்ளன. காத்தான்குடியில் மட்டும்தான் அரசமைப்பு விதிகளுக்குமாறாக அரபுமொழியிலும் வீதிப் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன. அரபுமொழிபள்ளிவாசலில் பயன்படுத்தப்படு வதை எவரும் ஆட்சேபிக்க வில்லை.

அது அவர்களின் மதஉரிமை. ‘மத்தியில் கூட்டாட்சி: மாநிலத்தில் சுயாட்சி”, என அறிவித்த ஒரு கட்சி தீவகத்தில் தனிஆட்சி என்பதையும் சில காலம் அமுல்படுத்தியது. கிட்டத்தட்ட அதேபாணிதான் அரபுமொழியில் பெயர்ப் பலகை வைப்பதும்.

ஒரு முஸ்லிமே இலங்கையின் தமிழ் நாவலை எழுதினார். 1885 இல் முஹமது காசிம்சித்திலெப்பையால் எழுதப்பட்ட இந்நாவலின் பெயர் அசன்பே சரித்திரம். பேராசிரியர் நுஃமான்இதனை தற்போது மறுபதிப்பு செய்துள்ளார். அற்புதமான கவிஞர்கள், எழுத்தாளர்கள்,வானொலி அறிவிப்பாளர்கள் தமிழிலேயே தம்மை இனங்காட்டினர்.

மொ.அ.ம.மொ.சுல்தான்தங்களது மாநகர பிதாவாக (05.01.1955 - 31.12.1955) யாழ்ப்பாண மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்ற உண்மையை ஹிஸ்புல்லாவோ, ஹக்கீமோ அடுத்த தலைமுறைமுஸ்லிம்களுக்கு நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்கள். இலங்கையின் மூலைமுடுக்குகளில்உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மொழியிலேயே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மதத்தின் பெயரால் முஸ்லிம்களை தமிழரின் விரோதிகளாக்கி, சிங்களவரிடம் கோத்துவிடும்வேலையைத்தான் ஜிகாத், முஸ்லிம் ஊர்காவல் படைகள் மூலம் இதுவரை ஹிஸ்புல்லாசெய்துவந்தார்.

சாதாரணமாக இலங்கை முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் சமாதான, சகவாழ்வையேமேற்கொண்டனர். குறிப்பாக வியாபாரம், விவசாயம் என்பனவற்றில் தமிழருடன் அவர்களுக்குஇருந்த உறவு ஆழமானது.

இன்றைய நிலை கவலையளிப்பதாக உள்ளது. முஸ்லிம் ஒருவர்சமைத்தார் என்பதற்காக ஒரு வைபவத்தில் கலந்து கொண்ட சிங்களவர்கள் உணவைப்புறக்கணித்தனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது முஸ்லிம் நிறுவனங்களுக்குவாடிக்கையாளர் செல்வதில் பாரிய வீழ்ச்சி காணப்படுகின்றது.

போட்டித் தொழில்களில்முஸ்லிம்கள் ஆர்வமுடன் ஈடுபட முடியாமல் இருக்கிறார்கள். சோதனைச் சாவடிகளிலும்இவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். இந்த நிலைமைக்கு சஹ்ரான் மட்டுமல்லஹிஸ்புல்லா போன்றவர்களும் முக்கிய காரணம்.

தமிழகம் போல மொழியுணர்வுக்கும்,மனிதநேயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலை மீண்டும் தோன்ற வேண்டும். மதத்தின்பெயரால் வேறுபாடுகளை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை நிராகரிக்கும் துணிவுமுஸ்லிம்களிடம் ஏற்பட வேண்டும்.