Jun 15

வவுனியா வைத்தியசாலையில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடமின்றி தவிக்கும் மக்கள்

வடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


வைத்தியசசாலைக்கு முன்பாக தமது துவிச்சக்கரண்டிகள், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு படையினர் தடை விதித்துள்ளதால், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வட வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தனால் வாகனங்கள், தலைக்கவசங்கள் தினமும் திருடப்படுகின்றன. என்று வாகனப்பாதுகாப்பு நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.