Mar 28

தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரார் கைது செய்யப்பட்டுள்ள 38 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி  பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இந்திய இலங்கை கடல் எல்லையில் உள்ள நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். அதற்கு இரு தினங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 38 மீனவர்களை மீட்கவும், இலங்கை அரசின் வசமுள்ள 129 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் . ஏற்கனவே இது தொடர்பில் அவர் கடிதம் எழிதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.