Jun 12

பளுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்கத் தமிழ்ப் பெண்!

ஸ்வீடனில் இடம்பெற்ற சர்வதேச ரீதியிலான பளுதூக்கும் (பவர் லிஃப்ட்டிங்) சம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒருவகை பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமாகவுள்ளது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவரே வெற்றியாளராக கருதப்படுகிறார்.