Mar 28

ஜெ. மகன் என்பவரை கைது செய்ய உத்தரவு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறி தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த பொலிஸார்  ஜெ.வின் மகன் என கிருஷ்ணமூர்த்தி போலி பத்திரம் தயார் செய்துள்ளதாக கூறினர்

கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசந்தாமணி என்பவரின் மகன் எனவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரிக்க குற்றப்பிரிவு பொலிஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்ய உதவிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, நேற்று நீதிமன்றத்தில்  ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது