Jul 19

அவுஸ்ரேலிய செனட்டர் பதவியை இராஜினாமா செய்த கனேடியர்

கனேடியரான லோரிஸ்ஸா வாட்டேர்ஸ், தனது அவுஸ்ரேலிய செனட்டர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக பதவி விலகும் இரண்டாவது செனட்டர் இவராவார். ஏற்கனவே இவரது கட்சி உறுப்பினரான ஸ்காட் லுட்லாம் தன் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் தன் பிள்ளைக்கு பலூட்டிய முதல் அவுஸ்திரேலிய செனெட்டர் வாட்டேர்ஸ் என்பது நினைவுக்கூரத்தக்கது