Mar 27

கிளிநொச்சி: அரச காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு வலியுறுத்தி வட்டக்கச்சியில் கண்டனப் பேரணி நடத்தப்படுகின்றது.

வட்டகச்சி விவாய பண்ணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி மாவட்ட செயலகத்தை நோக்கி செல்லவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த கண்டனப் பேரணியில் கமக்காரர் அமைப்புகள் உள்ளிட்ட பல பொது அமைப்புகள் கலந்துக் கொண்டுள்ளன.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.