Feb 28

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மைத்ரேயன் தலைமையிலான 12 எம்பிக்கள் சந்தித்து வலியுறுத்தினர். 

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.பி மைத்ரேயன், ’ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது யாரையும் அனுமதிக்கவில்லை. அவருக்கு அளித்த மருத்துவம் குறித்து ரத்த சொந்தங்களுக்குக் கூட தெரியப்படுத்தவில்லை. இதுவே சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

ஜெயலலிதா மரணத்தில் மேலும் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் சொல்வது உண்மையல்ல. அது பொய். பா.ஜ.க தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் ஜெயலலிதாவை சந்திக்க வந்தபோது, நோய் தொற்று ஏற்படும் என்று காரணம் சொல்லி, பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. 

ஆனால், செங்கோட்டையன் மட்டும் பார்த்ததாக சொல்கிறார். அவருக்கு மட்டும் "Immunity" அதிகம் உள்ளதா. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே குடியரசுத் தலைவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்த உத்தரவிடுவார் என நம்புகிறோம்’ என்றார்