Jun 10

மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதி போரில் 1.45 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அதை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ இன படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி, 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை பேரணி நடைபெற்றது. இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, உயிர் நீத்த ஈழ தமிழர்களுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க 500க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த போலீஸ் தடை விதித்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அனுமதி அளித்திருந்தனர். அதன்படி நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.

புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு தமிழ்னப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை தமிழர் கடலில் ( மெரினா) அனுமதி மறுக்கப்பட்டதனால் சேப்பாக்கம் மைதானம் அருகில் பேரணியோடு நினைவேந்தல் கூட்டமும் நடைபெற்றது.

பாலச்சந்திரன் படம் தாங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்திருந்தனர் இங்கு உரையாற்றிய திருமுருகன்சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றிய அரசே மெரினாவில் “நினைவு தூண்” அமைக்கும் வரை மே17 இயக்கம் தொடர்ந்து போராடும். ஏனென்றால் சிங்காரவேலன் ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக வருடா வருடம் நினைவேந்திய இடம் இந்த மெரினா.

தந்தை பெரியார் “தமிழ்நாடு தமிழர்க்கே”

என்று முழங்கிய இடம் இந்த மெரினா.

தமிழர் கடலை(மெரினா) மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்றார்.