Jun 10

சமுர்த்தி அரசியலும் ஜனாதிபதித் தேர்தலும்..

வறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமே சமுர்த்தி திட்டமாகும்

2013ம் ஆண்டின் 01ம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் மூலம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது. இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட பிரதான குறிக்கோளானது தனிநபர், குடும்பம், குழுக்கள் மற்றும் மக்களை மையமாக் கொண்ட வாழ்தார பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் வறுமை நிலையினை ஒழித்தல் மற்றும் சமூக சமத்துவத்தினை உறுதிப்படுத்துகின்ற சமுதாயம் ஒன்றினை உருவாக்குவதாகும்.

 சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்ற வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் நாட்டின் 25 மாவட்டங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது

இதே வேளை நாட்டில் இருந்து வறுமை ஒழிக்கப்பட்டுவருமாயின் சமுர்த்தி பயனாளிகளில் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் .ஆனால் இன்று நாடு முழுவதும் ஆறு லட்சம் பயனாளிகளை உள்வாங்கி இருக்கிறார்கள் என்றால் நாட்டில் 6 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளனர் என்றே பொருள்படும்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றாது இவ்வாறன சமுர்த்தி வழங்குவதன் மூலம் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வறுமை கோட்டிற்கு மக்களை தங்களது பக்கம் திருப்பவே இந்த நடவடிக்கை.

வடக்கில் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு சமுர்த்தி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் நடைபெற்று வருகிறது.அதேவேளை இதற்காக பாரிய அரச நிதி செலவிடப்படுகிறது 

இந்நிகழ்வுகளில் பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வரை முதியவர்கள், பெண்கள் ,கற்பிணித்தாய்மார்கள்.
குழந்தைகளுடன் பெண்கள் என  பலர்  காத்து நிற்க வேண்டியுள்ளது இதனால் பயனாளிகள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் மக்கள் வெறுப்படைந்து காணப்படுகின்றார்கள். மேலும் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மக்களிடம் நற்பெயரை பெறவேண்டும் என்பதற்காக தனது அரசியல் அசிங்கத்தை நிறைவேற்றியுள்ளார். இதனால் அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விசனம் அடைந்து காணப்படுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றமுடியும் உதராணமாக ரத்தன பிரியா என்ற இராணுவ அதிகாரி வன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததன் மூலமே மக்களின் மனங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. 

எனவே இனிவரும் காலங்களில் மீனை உணவாக மக்களுக்கு போடுவதை விடுத்து அவர்களுக்கு மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள். இவ்வாறு நீங்கள் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே மக்களின் வாழக்கை தரத்தை உயர்த்தமுடியும்.