Jul 19

ஜூலை 20, 21: சியோமி ரூ.1 பிளாஷ் விற்பனை

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனினை நேற்று அறிமுகம் செய்தது.

இதே விழாவில் அந்நிறுவனத்தின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 20 மற்றும் 21-ம் தேதிகளில் சிறப்பு விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டு விழா விற்பனையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 பிளாஷ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் குறைக்கப்பட்டுள்ள விலையில் சியோமி சாதனங்களும், சலுகை கூப்பன்களும் வழங்கப்பட இருக்கிறது.

நாளை (ஜூலை 20) காலை 11.00 மணி மற்றும் மதியம் 1.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரெட்மி 4A, வைபை ரவுட்டர் 2, எம்.ஐ. VR பிளே, 10,000 எம்ஏஎச் பவர் பேங்க், எம்.ஐ. செல்ஃபி ஸ்டிக் உள்ளிட்டவை ரூ.1க்கு பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும். இத்துடன் எம்.ஐ. சாதனத்திற்கு ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இத்துடன் எம்.ஐ. கேப்சூல் இயர்போன்களுக்கு ரூ.100 தள்ளுபடி, எம்.ஐ. ஹெட்போன் கம்ஃபர்ட் ரூ.300 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரூ.1,799க்கு விற்பனை செய்யப்படும் எம்.ஐ. இன்-இயர் ஹெட்போன் ப்ரோ எச்டி சிறப்பு விற்பனையில் ரூ.1,599க்கும், எம்.ஐ. VR பிளே ரூ.300 குறைக்கப்பட்டு எம்.ஐ. ஏர் பியூரிஃபையர் விலை குறைக்கப்பட்டு ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.