Mar 27

வெளிநாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்ய முடியும்; நிரான் அங்கெற்றல்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருப்பதையிட்டு சட்டக் கற்கைகளுக்கான தெற்காசிய நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் சட்டத்தரணியுமான நிரான் அங்கெற்றல் கருத்துத் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்ய முடியும் என்று அவர் கூறுகிறார். இலங்கை நீதிமன்றங்களில் ஏழு வருடங்களுக்கு மேலாக மனித உரிமைகள் அரசியலமைப்பு சட்டம் சிவில் வழக்குகளை அவர் கையாண்டிருக்கின்றார். 

நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டக் கற்கைகளை எல்.எல்.எம்.ஐ.  பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த அவர்  கம்போடியாவின் நீதிமன்றங்களில் அசாதாரணமான தீர்ப்பாயங்களில் சர்வதேச இணை விசாரணைகள் அலுவலகத்தில் பணி புரிந்தவர்.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிதியத்தைச் சேர்ந்த அவர் வெளிநாட்டு நீதிபதிகளை அரசியலமைப்பு இடமளிக்காது என்று டாக்டர் தயான் ஜெயதிலக மற்றும் வடமாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோர் தெரிவித்திருந்த கருத்துக்களையும் தவறானது என்று கூறுகிறார். வெளிநாட்டு நீதிபதிகளை நாங்கள் நியமிக்க முடியாது என்று அரசியலமைப்பு கூறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார். சிலோன் ருடே பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு;  

கேள்வி:ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில் அடுத்த இரு வருடங்களுக்குள் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் உறுதிமொழி அளித்திருக்கிறது. அதனை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்குமா? 

பதில்:  அவர்கள் இதனைச் செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் விரும்பவில்லை. பதிலளிக்கும் கடப்பாடு  விவகாரத்துடன் அதற்கு மறுப்பளித்து முன்நகர்வதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது தெளிவாக உருவாகியுள்ளது. அத்துடன் இராணுவத்தை சாந்தப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இது காணப்படுகிறது.

கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக மதிப்பளித்து பதிலளிக்கும் கடப்பாட்டை முன்னெடுப்பது முற்றுமுழுதாக ஸ்தம்பிதமடையாமல் தாமதமாக செல்வது என தீர்மானித்திருக்கிறது. அரசாங்கத்தின் நிலைப்பாடாக எப்போதும் இருந்ததில்லை.

2015 இல் அவர்கள் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய போது அச்சமயம் வேறுபட்ட கருத்து இருந்தது எனவும் அந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் மட்டும் கொண்டிருக்கவில்லை எனவும் பிரதமர் மற்றும் சு.க. உறுப்பினர்கள் உள்ளடங்கியவர்களும் கொண்டிருந்தார்கள் எனவும் நான் நினைக்கிறேன்.

 2015 ஒக்ரோபரில் பாராளுமன்றத்தில் இரு நாள் விவகாரம் இடம்பெற்றிருந்தது. தீர்மானத்தை பல இடங்களில் ஜனாதிபதி நியாயப்படுத்தியிருந்தார். ஆனால் இப்போது இந்த விவகாரம் தொடர்பாக முன்நகர்வதில் ஆர்வம்  இல்லை என தோன்றுகிறது. 

ஆயினும் 30/1 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அழைப்பு விடுக்கும் மற்றொரு தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருக்கிறது. அவ்வாறாக இருக்கின்ற போதிலும் "உண்மையான தயக்கம்' பதிலளிக்கும் கடப்பாட்டு விடயத்துடன் முன்நகர்தல் தொடர்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.  

அடுத்த இரு வருடங்களுக்குள் தீர்மானத்தை அவர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த தவறினால் புகழ் மற்றும் இராஜதந்திர ரீதியான பாதிப்பாக அமையும். ஒரு தடவை அல்ல இரு தடவைகள் இலங்கை உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. இரண்டாவது தடவையும் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் அதிலிருந்தும் பின்வாங்கிச் செல்ல முடியாது. 

கேள்வி: சர்வதேச ஈடுபாட்டுடன் அரசாங்கம் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் என கடந்த வாரம் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தீர்மானத்தை அமுல்படுத்துவதாக கூறியிருந்தார். அத்துடன் சர்வதேச நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்ய முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.  சில விதமான கலப்பு நீதிமன்றத்தை அல்லது சர்வதேச நிபுணர்களிடமிருந்து தொழில்நுட்ப ரீதியான சில உதவிகளை போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண விடுக்கப்படும் அழைப்பாக இது அமையுமா? 

பதில்: இருக்கின்றதோ இல்லையோ கலப்பு நீதிமன்றமானது  கவனமாற்றத்திற்குரிய செய்தியாகும். கலப்பு நீதிமன்றம் தொடர்பாக தெளிவான வரைவிலக்கணம் எதுவும் இல்லை. உலகளாவிய ரீதியில் சகலவிதமான கலப்பு நீதிமன்ற முன்மாதிரிகள் உள்ளன.

உதாரணமாக கம்போடியாவிலுள்ள நீதிமன்றம் அதிகளவிற்கு கலப்பு நீதிமன்றமாகும். ஆனால் இதற்காக ஆவணம் ஏற்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் கம்போடியாவின் நீதித்துறை முறைமையின் அங்கமாக அந் நாட்டில் சாதாரணமான 

நீதிமன்றமாக கருதப்பட்டது. ஆனால் சட்டரீதியாக அது சிறப்பான கலப்பு நீதிமன்றம் என விபரிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் விபரணங்களும் சின்னங்களும் விடயமல்ல.

ஆனால் 30/1 தீர்மானமூடாக தெளிவாக கூறப்பட்டிருக்கின்ற விடயம் பொதுநலவாயம் அல்லது ஏனைய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்கள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் என்போரில் பங்கேற்பு என்று கூறப்பட்டுள்ளது. அவர்களை ஆலோசகர்களாக கொண்டுவருவதென கூறப்பட்டிருக்கவில்லை.  

சர்வதேச நீதிபதி ஒருவர் ஆலோசகராக வருவார் என்ற உணர்வு எதனையும் இது ஏற்படுத்தியிருக்கவில்லை. சர்வதேச நீதிபதி ஒருவர் நீதிபதியாக அமராவிடில் அத்தகைய ஒரு விடயம் என்றும் ஏற்படாது. முன்னர் தொழில்சார் நிபுணர்களாக இருந்தவர்களில் சிலர் நீதிமன்ற அமர்வில் சர்வதேச நீதிபதிகளாக பணிபுரிந்துள்ளனர். அவர்கள் பேராசிரியர்கள் ஆவர். அவர்கள் சர்வதேச நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அவர்கள் பற்றி விபரணம் சர்வதேச நீதிபதிகள் என்பதே. அவர்கள் சர்வதேச நீதிபதிகளாகவே வருகின்றனர். இது தெளிவான விடயமாகும். அதேவேளை அதனை அப்பால் வைத்து விட்டு தீர்மானத்தின் செயற்பாட்டு பத்தி 1 ஐ நீங்கள் வாசிக்கும் போது “ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் விசாரணை அறிக்கை உட்பட கணிசமான எண்ணிக்கையான அறிக்கைகளின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என இது ஊக்குவிக்கின்றது.

உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையானது  2014 இல் பேரவையின் 25 ஆவது அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக உயர்ஸ்தானிகர் முன்னெடுத்திருந்த விசாரணை அறிக்கையாக இருக்கின்றது என்று தீர்மானம் கூறுகிறது. ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிக்கையை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என இது ஊக்குவிக்கின்றது.

அந்த அறிக்கை கலப்பு நீதிமன்றத்தை கோருகின்றது. செயற்பாட்டு பத்தி 1 மற்றும் செயற்பாட்டு பத்தி 6ஐ நீங்கள் வாசித்தால் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் என்போர் தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 2015 இல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வேறுபட்ட ஆட்களும் கலப்பு நீதிமன்றத்திற்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்தும் அரசாங்கம் அதற்கு இணங்கிவிட்டது எனவும் வாதங்களை முன்வைத்தனர்.

துரதிர்ஷ்ட வசமாக அந்த தருணத்தில் அதிக எண்ணிக்கையான ஏனையவர்கள் முற்றிலும் தவறாக வழிகாட்டப்பட்டுள்ளனர்.  இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு இது உதவி அளிப்பதாக அமைந்தது. தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் என்பது உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் அல்லது நீதிபதிகளாக சர்வதேச ரீதியான பங்கேற்பை தீர்மானம் மேற்கோள்காட்டியிருக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் தீர்மானம் மிகவும் பலவீனமாக இருந்தது எனவும் அவர்கள் கூறியிருந்தனர். வடமாகாண முதல் அமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட சர்வதேச நீதிபதிகளுக்கு அரசியலமைப்பின்  பிரகாரம் இடமில்லை என்று கூறியிருந்தார். அத்துடன் இது தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானம் ஒன்றையும் அவர் நிறைவேற்றியிருந்தார். 

“அரசியலமைப்பில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டிருப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. அதனால் நாங்கள் கலப்பு நீதிமன்றத்தை விரும்பவில்லை என்று வடமாகாண சபையில் அவர் தீர்மானத்தை நிறை வேற்றியிருந்தார். 

கேள்வி: கலப்பு நீதிமன்றம் ஒன்று அல்லது இதர வழிகளில் வழக்குகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இலங்கை அரசியலமைப்பு இடமளிக்கவில்லை என்பதில் உண்மை இருக்கிறதா? 

பதில்: அந்த நிலைப்பாடு தவறானதாகும்.  நீதிபதிகளின் தேசியம் பற்றி இலங்கை அரசியலமைப்பில் எதுவும் பேசப்பட்டிருக்கவில்லை. சத்தியப்பிரமாணம் எடுக்கும் தேவைப்பாட்டை மட்டுமே அது கொண்டிருக்கிறது. சத்தியப்பிரமாணத்தை எந்தவொரு நபரும் எடுக்க முடியும் என்பது எனது கருத்தாகும்.

அரசியலமைப்பை பேணிப்பாதுகாப்பது என்பதற்கு மட்டும் அந்த சத்தியப்பிரமாணத்தை மேற்கொள்ள முடியும். அத்துடன் அந்த சத்தியப்பிரமாணத்தில் இலங்கைக்கு விசுவாசத்தை கொண்டிருப்பது பற்றி கோரப்பட்டிருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவில் சத்தியப்பிரமாணத்தில் அமெரிக்கா விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இலங்கையின் சத்தியப்பிரமாணம் அது பற்றி கதைத்திருக்கவில்லை. அரசியலமைப்பை பாதுகாப்பது பற்றிய பிரதான சத்தியப்பிரமாணமும் மற்றும் பிரிவினைவாதம் தொடர்பான 6 ஆவது திருத்தமும் உள்ளன.  ஆதலால் வெளிநாட்டவர் ஒருவர் நீதிபதியாக ஏன் பணியாற்ற முடியாது என தெரியவில்லை.

ஆனால் விக்னேஸ்வரன் மற்றும் சனல் 4 படத் தயாரிப்பாளர் கலும் மெக்ரே ஆகியோர் இலங்கைக்கு கலப்பு நீதிமன்றம் தேவைப்படவில்லை என்று கூறியுள்ளனர்.  இந்த ஆட்களின் வாதமானது இலங்கை அரசாங்கம் பாதுகாப்புக் கருவியாக இதனை பயன்படுத்துகிறது என்பதாக காணப்படுகிறது.  

கேள்வி: பாராளுமன்றத்தினூடாக வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு நடைமுறை ஏதாவது உள்ளதா? 

பதில்: வேறுபட்ட வகையான நீதிபதிகளை நியமிப்பதற்கு வேறுபட்ட வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக  உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை ஜனாதிபதி நியமிக்கின்றார்.

ஆனால் நீதிச் சேவை ஆணைக்குழு இந்த விவகாரத்தில் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றவேண்டியுள்ளது.  மேல் நீதிமன்றத்திற்கு தாழ்ந்த மட்டத்திலுள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகளை நீதிச்சேவை ஆணைக்குழு மேற்கொள்கின்றது. ஆதலால் தாங்கள் விரும்பும் எவரையாவது நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்க முடியும் என்பது எனது கருத்தாகும்.  

அத்துடன் அவர்களால் வெளிநாட்டு நீதிபதிகளையும் நியமிக்க முடியும். எனது கருத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் இந்த நியமனத்தை மேற்கொள்ள முடியும். நீதிச்சேவைகள் ஆணைக்குழு வெளிநாட்டு நீதிபதிகள் என்போருடன் இணைந்து ஆதரவை வழங்க முடியும்.  அவர்கள் மேல் நீதிமன்ற ஆணையாளர்களாகவும் நியமிக்கப்பட முடியும்.

ஆதலால் வெவ்வேறுபட்ட முறைகள் உள்ளன. விசேட நீதிமன்றம் ஒன்று இங்கு எவ்வாறு அமைக்கப்படப் போகின்றது என்பதில் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான விடயங்களிலேயே இது தங்கியிருக்கின்றது. 

கேள்வி: இந்தச் சகலவிதமான ஏற்பாடுகளுக்கும் அரசியலமைப்பு ரீதியான திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதா? 

பதில்: இல்லை. அரசியலமைப்பில் திருத்தத்திற்கு இந்த தேவைப்பாடுகள் இல்லை என்பதே எனது கருத்தாகும்.  நீங்கள் நீதிமன்றத்தை அமைக்க முடியும். விசேட ஆலோசகர் நீதிமன்றத்தையும் அமைக்க முடியும். அத்துடன் விசேட ஆலோசக அலுவலகமானது விசேட விசாரணையாளர்களை உள்ளடக்கியதாகவும்  தேவையான சர்வதேச பங்கேற்பை கொண்டிருப்பதாகவும் அரசியலமைப்பை மாற்றிக்கொள்ளாமல் கொண்டிருக்க முடியும்.  

கேள்வி: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்ற சட்ட ரீதியான தொழிலில் ஈடுபட்டவர்கள் இதனை அறிந்திருக்கவில்லை என நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா? 

பதில்: 2015 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த போது அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் அதனை தங்களால் செய்ய முடியும் என்ற கருத்தை அவர்கள் கொண்டிருந்ததாக தென்படுகிறது. டாக்டர் தயான் திலக போன்ற ஆட்கள் இது அரசியலுக்கு எதிரானது எனவும் கூறியிருந்தனர்.

மறுதரப்பில் விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இரு தரப்பிலுமுள்ள கடும் தீவிரவாத தன்மை கொண்டவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கொண்டவர்களாக உருவாகியுள்ளனர். அது துரதிர்ஷ்டவசமானதாகும். தீர்மானம் தொடர்பாக எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஏனெனில் முழுமையாக அமுல்படுத்துமாறு  விடுக்கப்படும் கோரிக்கையுடன் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.  

மாற்றீடான நடவடிக்கை எதுவும் தீர்மானம் தொடர்பாக காணப்படவில்லை. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பது இயல்புக்கு முரண்பாடானது. இந்த நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. சில விடயங்களை தேடிப் பார்க்க வேண்டும். அது ஒருபோதும் மீள இடம்பெறாதவாறு பார்க்க வேண்டும்.

இந்த விடயம் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதில் முற்றிலும் மறுப்பதாக அமையும்.  தீர்மானத்தை அமுல்படுத்தச் செய்வதற்கு அழுத்தத்தை பிரயோகிக்கின்ற சந்தர்ப்பத்தையாவது குறைந்தது நாங்கள் கொண்டிருக்கவேண்டியுள்ளது. எவரும் அந்த அழுத்தத்தை அகற்றுவதை நோக்கி செயற்படக்கூடாது.  

கேள்வி: அடுத்த இரு வருடங்களுக்குள் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் விளைவுகள் எவ்வாறாக அமையும்? 

புலம்பெயர்ந்த தமிழர்கள் அழைப்பு விடுத்திருப்பது போன்று பொதுச் சபைக்கு இலங்கையை பாரப்படுத்தும் சாத்தியப்பாடு உள்ளதா? நடவடிக்கைகள் தோல்வியடையுமானால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?  

பதில்: சகல சாத்தியமான நீதிமன்றங்களும் குற்றவியல் நீதி விசாரணையை மேற்கொள்ள முடியும். இது நீண்ட காலமாக இருந்து வரும் விடயமாகும். ஆனால் நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கைவிடவேண்டியுள்ளது.  

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்ற முறையில் இதுவே எனது கருத்தாகும். அடுத்த கட்ட நடவடிக்கையை நீங்கள் செய்யப்போவதாக தீர்மானித்தால் ஐ.நா.வின் இந்த தீர்மானம் தேவையில்லை.

இந்த தீர்மானத்தினூடாக மட்டுமே உயர்ஸ்தானிகரின் அறிக்கை வருகின்றது. இதனைக் கைவிட்டால் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கான இடமிருக்காது.  பாதுகாப்பு சபையை எட்டுவதாயின் இலங்கை சர்வதேச ரீதியான அச்சுறுத்தல் அல்லது சமாதானம் தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கொண்டிருக்க வேண்டும்.  

இந்த மாதிரியான விடயத்திற்கு பாதுகாப்பு சபையின் ஆதரவு இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை விட்டு விட்டு பாதுகாப்பு சபைக்கு செல்லும் எண்ணப்பாடானது மிகைப்படுத்தப்பட்ட விடயமாகவே  அமையும்.