Jun 07

தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம்

உலக வரலாற்றில் ஒரு உன்னத நாடு எம் தமிழீழம்…

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது!

லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை!அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது!

கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது! ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்! குனிந்துவிட்டோம் ஆயினும், நிமிர்ந்தோம் என்பதும் வரலாறு

மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்!

அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்!இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!

இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!