Jun 06

மதங்களின் பெயரால்....! அவதானி

காணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை நாடிய பெண்ணொருத்திக்கு நீதிமன்றிலேயே பயமுறுத்தல் விடுத்த ஞானசாரதேரரின் விடுதலை குறித்த விடயத்தில,; கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, தமிழரைமும்பையிலிருந்து விரட்டியடித்த சிவசேனா அமைப்பைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன்ஆகியோர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர்.

இரு அம்சங்களில் இவ் விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவது ஞானசாரர் ஒருமதகுரு. இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு. ஹிஸ்புல்லா விடுத்த கோரிக்கையில்இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தேரர் விடுவிக்கப்பட வேண்டும்என குறிப்பிட்டிருந்தார்.

ஏன் 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரகுபதிசர்மாவை விடுவித்தால் நல்லெண்ணம் வராதா? உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில்பாதிக்கப்பட்டவர்கள் தமிழர். ஆனால், தமிழர் எதிர்வினை ஆற்றவில்லை. வடமேல் மாகாணம்உட்பட பல்வேறு இடங்களில் சிங்களவரே முஸ்லிம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அப்படி இருந்தும் பௌத்த மத குருவின் விடுதலையை வலியுறுத்தும் ஹிஸ்புல்லாரகுபதிசர்மாவின் விடுதலையை அவசியமில்லை எனக் கருதுகின்றாரா? இந்து மதத்தை ஒருசரியான வாழ்வு நெறியாக ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் தானும் சஹ்ரானின் சகாதான்என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

ஏற்கனவே ஓட்டமாவடியில் இருந்த இந்துக் கோயிலை அகற்றிய ஹிஸ்புல்லாவின் சாதனைகுறித்து முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றும் காணொலி சமூக வலைத்தளங்களில்வெளியாகி இருந்தது. இந்து மதத்தின் மீது தனக்கு வெறுப்பு உள்ளது என்பதைமுஸ்லிம்களிடத்தில் நிறுவவே அவர் இவ்வாறு பகிரங்கமாக உரையாற்றி இருந்தார்.

ஆனால்,உண்மை என்ன? இது சம்பந்தப்பட்ட தமிழர் (கோயிலுக்குச் சொந்தக்காரர்) எமது தேசியவிடுதலைப் போராட்டத்தின் தீவிர பங்காளிகள். அவர்கள் ஓட்டமாவடிப் பகுதிக்கு தினமும்சென்று இக்கோயிலை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். அதனால்,ஏதோவொரு உடன்படிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் ஒருவருக்கு கைமாறியிருந்தது

இக்கோயில் அமைந்திருந்த காணி.இதுபோல மறவன்புலவு சச்சிதானந்தம் இலங்கையில்ஆதிமதம் என்ற வகையில் பௌத்தத்தின் மதகுரு விடுதலை செய்யப்பட வேண்டும் என்றநிலைப்பாட்டை எடுத்திருந்தார். அவருக்கும் இந்துமத குருவான ரகுபதி சர்மாவின் விடுதலைஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல திருமலை கன்னியாவிலுள்ள பிள்ளையார்ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது, செம்மலை, நீராவியடிபிள்ளையார் ஆலயப் பகுதிக்குப் பிக்கு உரிமை கோருவது, கனகராயன் குளத்தில் தனியார்காணியில் படையினர் விகாரை அமைத்திருப்பது போன்ற விடயங்கள் தெரியாதது போல்நடந்து கொள்கிறார். அதன் மூலம் இந்தக் காவியுடைக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது என்றுவெளிப்படையாகத் தெரிகிறது. நிச்சயம் அது தமிழர்களுக்கு சார்பானதல்ல.

கடந்த இரு வருடங்களாக திருவாதிரை உற்சவத்துக்கு சிதம்பரத்துக்குச் செல்வதற்காகபயணிகள் கப்பல் விடப்போகிறேன் என்றார். ஆனால், இவரால் மழைக்குஒருகாகிதக்கப்பல்கூட விடமுடியவில்லை. பயணிகள் போக்குவரத்து என்பது இரு நாடுகளுக்குஇடையிலான விவகாரம்.

இரு அரச தலைமைகள் இதில் உடன்பாடு காணவேண்டும். வடக்குமாகாணசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அதில் உள்ள 38 உறுப்பினர்களும்வடக்கிலிருந்து தமிழகத்துக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

அந்த வேண்டுகோளை அரசு குப்பைக் கூடைக்குள் கடாசிஇருந்தது. இந்த நிலையில் தனிமனிதனான இவரது கூற்றுக்கு அரசு சம்மதம் அளிக்குமா?அடுத்தது நீதிமன்ற விவகாரம், நீதிபதிக்கு முன்னாலேயே பயமுறுத்தல் இருந்தமை ஒருநாட்டின் நீதிக் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும் விடயம். இதற்கு எந்தச் சமாதானமும்சொல்ல முடியாது.

எனினும் நீதித்துறையை சவாலுக்கு உட்படுத்தி உள்ளார் ஜனாதிபதிமைத்திரி, ஜனாதிபதியாக மகிந்த இருந்தபோது தனக்கு உடன்பாடு இல்லாத தீர்ப்பை வழங்கியபிரதம நீதியரசரை பதவியிலிருந்து நீக்கினார். கிட்டத்தட்ட அந்த வகையிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஞானசாரதேரரும் நீதிக்கு முரணாகவே ஜனாதிபதியால்விடுவிக்கப்பட்டுள்ளார்.

3 குற்றங்களுக்கான தண்டனையும் ஏக காலத்தில் ஞானசாரர் அனுபவிக்க வேண்டும் எனகுறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் இவர் 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனைஅனுபவிக்க வேண்டும். எனினும் 6 மாதம் கூட நிறைவடையாமலேயே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதுவும் ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பாகவே கருதவேண்டியுள்ளது. ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் பிரதம நீதியரசரின் இல்லத்தின் மீது கல் வீச்சுநடத்தப்பட்டது. இப்போது தீர்ப்பையே தூக்கி எறிந்து விட்டார் ஜனாதிபதி. தேரரின் விடுவிப்புசட்டப்படி செல்லபடியாகாது எனத் தீர்ப்பளிக்கும்படி நீதிமன்றில் மனு சமர்ப்பித்துள்ளனர்

சிரேஷ்ட சட்டத் தரணிகள்.இந்தியாவில் உள்ளது போல இந்த நாட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதுஇல்லை. இதுநாள்வரை ஜே.வி.பி. இரு வழக்குகளை தாக்கல் செய்தது. இவற்றை பொதுநலவழக்குகள் என்பதைவிட, சிங்கள நலன் அல்லது திமிர் என்றோ தமிழர் எதிர்ப்போ என்றுதான்குறிப்பிட முடியும்.

முதலாவது வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிரானது. மற்றையது சுனாமிகட்டமைப்பை தகர்க்கும் நோக்கிலானது. இரண்டிலுமே தமிழருக்கு எதிரான தீர்ப்புக்களேகிடைத்தன.

இதேவேளை, நீதிமன்றை அவமதித்தமை தொடர்பான வழக்கினை தமிழ் இளைஞர்களுக்கும்எதிர்நோக்க உள்ளனர். ஞானசாரதேரர் வேண்டுமென்றே நீதிமன்றில் ஏறி தப்புச் செய்தார்.

தமிழ் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் தவறிழைத்தனர். அந்தச் சம்பவம் இதுதான்.மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டதையடுத்துகுற்றவாளிகளை பிடித்து ஒப்படைத்தபோதும் பொலிஸார் தன்னிச்சையாக அவர்களைதப்பிப்போக வைத்தனர்.தப்பிச் சென்றவர்கள் நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட உள்ளனர்என்ற வதந்தியையடுத்து நீதிமன்றச் சூழலில் ஆர்ப்பாட்டம் செய்தபோது உணர்ச்சிவசப்பட்டநிலையில் நீதிமன்றுக்கும் கல்லெறிந்து தவறிழைத்தனர் இளைஞர்கள்.

அவர்கள் அனைவரும்நீண்டகாலமாக வழக்கை எதிர்நோக்கியுள்ளனர் தவறு என்பது தவறிச் செய்வதுதப்பு என்பதுதெரிந்து செய்வதுதவறு செய்தவன் திருந்தப் பாக்கனும்தப்பு செய்தவன் தருந்தியாகனும்என்றவரிகள் உள்ள பாடல் நம்நாடுதிரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்இளைஞர்கள் செய்தது தவறு. ஞானசாரர் செய்ததோ தப்பு. தப்புச் செய்த ஞானசாரதேரர்

திருந்தியதாகத் தெரியவில்லை. ஆனால், தவறு செய்த இளைஞர்கள் இன்னமும் நீதிமன்றத்தீர்ப்பை எதிர்கொண்டுள்ளனர்.ஞானசார தேரருக்குச் சட்டப்படி திருமணம் ஆகாது. தமிழ்இளைஞர்களோ திருமணம் செய்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியவர்கள். எந்தவொருதமிழ் அரசியல் வாதிகளும் ஞானசாரதேரரின் விடுதலையை சுட்டிக்காட்டி இவர்களைவழக்கிலிருந்து விடுவிக்குமாற ஏன் கேட்காமல் இருக்கிக்கின்றனர் என்பது புதிர்தான்.

இலங்கையின் பாரம்பரிய மதத்தைக் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு ஞானசாரதேரரின்விடுதலையை வரவேற்ற மறவன்புலவு சச்சிதானந்தன் கூட இந்த இளைஞர்களைவழக்கிலிருந்து விடுவிக்குமாறு ஏன் கேட்கவில்லை என்பது ஒரு புதிர்தான்.

அரைக்காற்சட்டையுடன் இராணுவத்தினரின் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அவர், அந்தச்செல்வாக்கு மூலமாவது இந்த இளைஞர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியைக்கேட்கலாமே.இந்தியாவில் தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு உண்டு என நிரூபிக்கபகீரதப்பிரயத்தனம் செய்கிறார் மறவன்புலவார்.

இவர் ஆதரிக்கும் இந்துத்துவக் கட்சியானபாரதீய ஜனதாக்கட்சி தனது இரண்டாம் ஆட்சிக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.ராஜீவ்கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோரை மாநில அரசு விடுவிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டாது. தமிழக அரசு இவர்களின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

மறவன்புலவாரின் உணர்வும் உயிருமாகவுள்ள உறவுகளின் ஒருவரே தமிழக ஆளுநர். ஆனால்,அவரோ இவ்விடயத்தை கிடப்பில் போட்டுள்ளார். மௌன விரதம் அனுஷ்டிக்கிறார்.சங்கிலியனின் விழாவைக்கொண்டாட இந்தியத் தூதரகம் அனுசரணை வழங்குகிறது.புனிதகங்கைகளின் நீரைக் கொண்டு வருகிறோம்| இந்துக் கட்சியினர் வருகின்றனர் என்றெல்லாம்பிரமாண்ட அறிவிப்புக்கள் வந்தன.

இதே செல்வாக்கைப் பயன்படுத்தி 7 தமிழர் விடயத்தில்தமிழக ஆளுநர் மனமிரங்க வேண்டுமென மறவன்புலவார் வேண்டுகோள் வகுக்கலாம் அல்லதுயாகம் செய்யலாம்.அப்படியொரு யாகம் செய்ய முனைந்தால் அதற்குத் தேவையான நிதியைஉண்டியல் குலுக்கியேனும் வழங்க தமிழினம் தயாராக உள்ளது. யாகம் மூலமோ யோகம்வழியாகவோ இந்தியச் செல்வாக்கினை வெளிப்படுத்த மறவன்புலவார் முன்வரவேண்டும்.அப்படியே புலிகள் மீதான தடையை நீக்கவும் அவர் முயற்சித்தால் நல்லது.