Mar 26

கீரியும் பாம்புமாக சு.கா.வும், ஐ.தே.கவும்; தேசிய அரசு விரைவில் கலையலாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளது.

வெகு விரைவில் தேசிய அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

இலங்கையில் இப்போது கலப்பு அரசாங்கம் ஒன்று தான் உள்ளது. பிரதான இரண்டு கட்சிகளும் கீரியும் பாம்புமாய் செயற்பட்டு வருகின்ற.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பார்க்கும் போதே பாம்பை போலவே தெரிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எம்மைக் கண்டால் கீரியை போலவே  செயற்படுகின்றது. 

விரைவில் கீரியும் பாம்பும் சண்டை போடவேண்டிய நிலைமை ஏற்படும். அண்மைக் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலர் அரச அதிகாரிகளுடன் நடந்துகொண்ட விதத்தை பார்த்தோம்.

அதுவே நல்ல எடுத்துக் காட்டாகும். அதேபோல் தனியார் மயப்படுத்தல் நோக்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் பயணத்தையும் நாம் தடுத்து வருகின்றோம் என்றார்.