Mar 26

ஒத்துழைப்பினை தொடர்ந்தும் அளிப்பதற்குதயார்; பாகிஸ்தான் தூதுவர் அறிவிப்பு

பாகிஸ்தானின் 77 ஆவது தேசிய தினத்தினை கொண்டாடும் முகமாக வரவேற்பு நிகழ்வொன்று பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினால் கொழும்பில்  மார்ச் 23 ஏற்பhடுசெய்யப்பட்டிருந்தது.

இங்கு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர்.ஜெனரல். () ஷையத் ஷகில் ஹிசைன்   உரையாற்றுகையில்,

பாகிஸ்தானின் பொருளாதாரமானது வளர்ச்சிப் பாதையில் பிரயாணிப்பதுடன், பிராந்தியத்தின் பொருளாதார சக்தியாக உருவாகிவருகின்றது.

 சீன- பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்திட்டம், பாகிஸ்தான்-சீன உறவுகள் என்பன  சமூக-பொருளாதார அபிவிருத்தியில் பிராந்தியத்தின் தலைவிதியினை மாற்றும் சக்தியாக அமைந்துள்ளது.

அத்துடன் இப்பாரிய திட்டம் நிறைவுப்பெற்றதும் பாகிஸ்தானிற்கு மட்டுமல்ல இலங்கை உட்பட பிராந்தியத்தின் அனைத்து நாடுகளிற்கும் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தினை   அளிக்கும்.

இலங்கை-பாகிஸ்தான்  இருநாட்டு மக்களிடமும் காணப்படும் ஆழ்ந்த பரஸ்பர அன்பானது இருதரப்பு விஷேட உறவிற்கு மூலப்பொருளாக காணப்படுகின்றது.

அத்துடன் இவ்வுற   பொதுதன்மை, உலக சமாதானத்தின் நன்மதிப்புகளுடன், பௌத்தம், இஸ்லாம் மதங்களினால் போதிக்கபடுகின்ற அன்பினால் மேலும் வலுப்பெற்றுள்ளது

பாகிஸ்தானிய அரசானது  இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும்  தங்களது அழகான நாட்டினது எதிர்காலத்தினை  வளமிக்கதாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு அர்பணிப்புடனான ஒத்துழைப்பினை தொடர்ந்தும் அளிப்பதற்கு தயாராகவிருக்கின்றது என்றார்.