Mar 26

கொங்கோவில் 40 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையைத் துண்டித்து படுகொலை

கொங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள  தீவிரவாதிகள் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்டு சுமார் 40  பொலிஸ் உத்தியோகத்தர்களை தலையைத் துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


காஸாய் மாகணத்தில்  பயணித்த  படையினரின் வாகனங்கள்  மீது கம்வினா நஸபு என்ற தீவிரவாத குழுவின் உறுப்பினர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது  6  பொலிஸ் உத்தியோகத்தர்கள் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.