Mar 26

பங்களாதேஷில் இரட்டைக் குண்டுத் தாக்குதல்கள்

வட கிழக்கு பங்களாதேஷில்  நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இரட்டைக்  குண்டுத் தாக்குதல்களில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், 4  பொதுமக்கள் உட்பட 6  பேர்  பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.


சைல்ஹெட் எனும் இடத்தில் குடியிருப்புக் கட்டமொன்றுக்கு அண்மையில்  இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

 

குறிப்பிட்ட குடியிருப்பு கட்டடத்திலிருந்து  78  பொதுமக்களை வெளியேற்றி அங்கிருந்த  தீவிரவாதிகளை கைது செய்யும் முயற்சியொன்றை  பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்ட நிலையிலேயே மேற்படி குண்டுகள் வெடித்துள்ளன.


முதலாவது குண்டுத் தாக்குதல்  மோட்டார் சைக்கினொன்றில் வந்த இருவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இரண்டாவது குண்டு  மரக்கறி பையொன்றில்   மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் ஒன்றுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள்  டெலிகிராம் இணையத்தளத்தில் தம்மால் வெளியிடப்பட்ட செய்தியில் உரிமை கோரியுள்ளனர்.