Jul 18

பிரித்தானிய அரச தம்பதியர் போலந்துக்கு விஜயம்

பிரித்தானிய அரச தம்பதியர் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது துணைவி கேட் மிடில்ட்டன் ஆகியோர் போலந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) போலந்துக்கு சென்றிறங்கிய அவர்களுடன் குட்டி இளவரசர் ஜோர்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லட் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

வார்சோ விமான நிலையத்தில் சென்றிங்கிய போது படமாக்கப்பட்ட காணொளிகளில், குட்டி இளவரசர் ஜோர்ஜ் விமானத்தை விட்டு இறங்க தயங்கிய நிலையில், இளவரசர் வில்லியம் அவருக்கு உற்சாகமூட்டி விமானத்தில் இருந்து இறங்க வைப்பது பதிவாகியுள்ளது.

குறித்த விஜயத்தின் போது நாஸி சித்தரவதை முகாம் மற்றும் அருங்காட்சியகத் என்பவற்றை மேற்படி அரச தம்பதியர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980 களில், கமியூனிச ஆட்சிக்கு சவால் விட்ட ஒருமைப்பாட்டு இயக்கத்தை நினைவுகூரும் வகையிலேயே அரச தம்பதியரின் இந்த போலத்துக்கான விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.