Mar 26

தனித்து தாக்குதல் நடத்திய மான்செஸ்டர் தாக்குதல்தாரி

பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் பிராந்தியத்தில்  தாக்குதலை நடத்தி நால்வரைக் கொன்று சுமார் 50  பேரைக் காயப்படுத்திய  காலித் மன்சூத்  தனித்தே அந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும்  அந்நாட்டில் மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து தகவல் எதுவும் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை எனவும்  ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

காலித் மன்சூத் 82   வினாடிகள் நேரத்திற்குள் பாதசாரிகள் மீது காரால் மோதியதைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றிருந்தார். இதனையடுத்து அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

இந்நிலையில் அவர் எதற்காக இந்தத் தாக்குதலை மேற்கொண்டார் என்பது தொடர்பில் தாம்  திட்டவட்டமாக எதனையும் அறிய முடியாதுள்ளதாக  பொலிஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தையடுத்து  பேர்மிங்ஹாமில் வைத்து கைதுசெய்யப்பட்ட 58  வயது நபரொருவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் உள்ளார்.