Mar 26

ஹொங்கொங்கின் தலைவராக முதல் தடவையாக பெண்

ஹொங்கொங்கின் தலைவராக முதல் தடவையாக பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


மேலதிக  ஜனநாயகத்தை வலியுறுத்தியும்  மற்றும்  நாட்டில் சீனாவின்  செல்வாக்கு அதிகரித்து வருகின்றமைக்கு  எதிர்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே  காரி லாம் (59  வயது)   அந்த தன்னாட்சி பிராந்தியத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

 தலைமை நிறைவேற்றதிகாரி  பொதுமக்களின் வாக்கெடப்பின் மூலம் தெரிவு செய்யப்படாத போதும்  அவரது தெரிவு  சீன  ஆதரவு தேர்வாளர்கள் குழு செல்வாக்குச் செலுத்தும் 1,200  உறுப்பினர்களைக் கொண்ட சபையொன்றால்  மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில்  இந்த வாக்கெடுப்பில்  சீன அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்ற காரி லாமே   வெற்றி பெறுவார் என ஏற்கனவே பரவலாக  எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.