Jul 18

நோர்த் யோர்க் பகுதியில் மோதல் ;ஒருவர் மருத்துவமனையில் ...

நோர்த் யோர்க் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜேன் வீதி மற்றும் ஃபின்ச் அவனியூ பகுதியில், யோர்க் கேட் புலவார்ட்டில் அமைந்துள்ள உடற்பயிச்சிக் கூடம் ஒன்றுக்கு வெளியே, நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது மோசமான காயங்களுக்கு உள்ளான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அவரது பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

குறித்த இந்த சம்பவ இடத்திலிருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்த்துறையிராலும் இதுவரை சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.