Mar 26

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்; இறுதியான அறிக்கை தயார்?

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்  தொடர்பான இறுதி திருத்தப்பட்ட அறிக்கையின் வடிவம் தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மேர்சன்ட் தனியார் துறைமுக அபிவிருத்தி நிறுவனத்துக்கும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட குறித்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற திருத்தங்கள் மற்றும்  இருதரப்பினரின் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே  குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

96 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடு தொடர்பிலும் ம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திக்கான செயற்றிட்டங்களையும் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..