May 30

தமிழர் போரில் தோற்றிருக்கலாம்| மனிதாபிமானத்தில் தோற்கக்கூடாது! அவதானி

எனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில் கூடியிருந்தோம்.எனது அம்மாவும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்திருந்தனர். ஒருசகோதரி மட்டும் இந்தியாவிலேயே வாழ்க்கைப்பட்டிருந்தார். அவரது மூத்த மகள் ஜடாசலோமிதனது தாயாரின் மரணம் குறித்து கூறுகையில், எங்கம்மா கலியாணம் முடிச்சு ஒத்த ஆளாகாரைக்குடிக்கு வந்திருந்தாங்க.

அவங்க மரணம் நடந்தப்ப தொடந்து ரெலிபோன்அடிச்சுக்கிட்டே இருந்திச்சு. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா...என்னு மாறிமாறி கால் வந்திட்டே இருந்திச்சு. அப்பதான் இவங்க என்னமாதிரிவாழ்ந்திருக்காங்க| நம்ம உறவுங்க மனசில எப்பிடி இடம்பிடிச்சிருந்தாங்க என்னு புரிஞ்சுக்கமுடிஞ்சிசு; என்று குறிப்பிட்டார்.

இவர் சொல்லி முடிந்ததும் அருகிலிருந்த எனது சகோதரி

இனி பெல்ஜியத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கோ என்று சொன்னார். சலோமியக்கா சொன்னநாடுகளில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்தவர்களின் வாரிசுகள். இவர்களில்ஆஸ்திரேலியாவில் இருப்பவர் மட்டும் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பெற்று, வாழ்ந்துவருகிறார். ஏனைய அனைத்து நாடுகளிலும் இருப்பவர்கள் இலங்கையில் வாழ இயலாது என்றுஅரசியல் தஞ்சம் கோரியவர்கள். இந்த நாடுகளில் இங்கிலாந்து மட்டுமே இலங்கைத்தமிழர்களுக்கு தஞ்சம் அளிக்கவேண்டிய தார்மீகக் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் ஒற்றைக் கண் சோல்பரிப் பிரபு அரசியல் அமைப்பைஉருவாக்கியதாலே அவருக்கு சிங்களவர்கள்தான் தெரிந்தனர். தமிழரின் நலன் - பாதுகாப்புபோன்ற விடயங்கள் அவரது பார்வைக்கு தென்படவில்லைஎன்று அடிக்கடி சொல்வார்.வெள்ளைக்காரர் வெளியேறும் போது, தமிழரையும் சிங்களவரிடம் ஒப்படைத்ததால்தான் இந்தநிலைமை என்பது அவரது கருத்து. அந்த வகையில் தஞ்சம் கோரும் இலங்கைத் தமிழருக்குஇங்கிலாந்து புகலிடம் அளிக்க வேண்டும்தான். ஆனால், ஏனைய நாடுகளுக்கு என்ன தேவைஉள்ளது? மனிதாபிமான அடிப்படையிலேயே தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கின்றனர்|வழங் குகின்றனர். வேறு எந்தக் கடப்பாடும் அவர்களுக்கு இல்லை.

முன்னர் மணியோடர்பொருளாதாரம்| கொழும்பிலோ ஏனைய இடங்களிலோ பணியாற்றுபவர்கள் தபாற்கந்தோர்மூலமாக குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பி வைத்தனர். இன்றோ தாம் தஞ்சமடைந்தநாட்டிலிருந்து அனுப்பியதாகச் சொல்லும் தொலைபேசி மணியோசைக்காக காத்திருக்கிறோம்எம்மில் பெருந்தொகையானோர். இந்நிலையில் ஏதிலிகளாக வந்தோரை வடக்கில் வாழவிடமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அரசியல்வாதிகளும், ஏதோ ஒரு வகையில் தன்னையும்தமிழ் விசுவாசியாகக் காட்ட முனையும் ஆளுநரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எம்மைதலை குனிய வைத்துள்ளன.

சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வவுனியாவில் உள்ள கணிசமானஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும்-

தங்களது உறவுகள் ஆதரவாளர்கள் எவரும் எந்த நாட்டிலும் தஞ்சம் கோரவில்லை என்று.தமிழரின் விருந்தோம்பும் பண்பு, மனிதநேயம் எல்லாம் எங்கே போய்விட்டன? இந்த ஏதிலிகளாதமிழரின் இனப்பரம்பலை மாற்றி அமைக்கப்போகின்றனர்?இறுதி யுத்தத்தின் பின்னர்ஏற்கனவே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பலர் வவுனியாவிலிருந்தமுகாம்களுக்குச் சென்று தமக்கு ஏற்கனவே அறிமுகமான தமிழ் நண்பர்களுக்கு தங்களாலானஉதவிகளைச் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் அறிந்தவரை யாழ்ப்பாணத் தில் சிங்களவருக்குச் சொந்தமாக காணி இருந்ததில்லை.பேக்கரி தொழில் செய்ய வந்தவர்கள் வாடகைக்கு கடைகள், வீடுகள் பெற்றிருந்தினர். அரசஊழியர்கள் தமக்கான விடுதிகளில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு சிங்களப் பகுதிகளில்சொந்தமாகக் காணிகள், வீடுகள் இருந்தன. ஆனாலும், சட்ட விதிகளுக்கு மாறாகநாவற்குழிக்குள் இந்த அரச வீடமைப்புத் திட்ட வீடுகளைப் பிடித்து குடியமர முடிகிறது.

கூடவேபுதிதாக விகாரைகளும் அமைக்க முடிகிறது. கொழும்பு உட் பட தென்னிலங்கையில்மலையகத்தில் இருந்து தமிழர் விரப்பட்டனரே? இவர்களை சட்டத்துக்கு மாறாகவோ சட்டரீதியாகவோ கொண்டுபோய் குடியமர்த்தும் ஆற்றல்/துணிவு இந்த அரசியல் வாதிகளுக்குஉண்டா? பறந்தாலும் விடமாட்டேன்என்று பாடியபடி ஜனாதிபதி, நாடாளுமன் றத்தேர்தல்களில் மஹிந்தவை துரத்தித் துரத்திப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் முதலில்குருநாகலில் இப்பணியை முன்னெடுப்பாரா? அதிதீவிர தமிழ் விசுவாசம் முன்னர் ஒருகட்சிதான் காட்டியது. அது முள்ளிவாய்க்கால் உட்பட பல்வேறு விடயங்களிலும் தனித்து நின்றுதப்பாட்டம் ஆட முனைந்தது. அது முடிய இப்போது ஆளுநர் ஆட முனைந்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் தனியே போய் அஞ்சலி செலுத்துவது, தஞ்சம் என வந்தோரை அகற்றுவதுஎன்று தமிழன்டா என்று காட்ட முனைகிறார். இவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலின்பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. நல்லது.நல்லூ ரில் சாமி கும்பிடும் ஒவ்வொரு இந்துவும் முஸ்லிம்களுக்கு கடமைப்பட்டவன் என்றஉண்மை இவருக்கு தெரியாது தான். இப்போதுகூட கோயிலுக்கு முன்னால் கற்பூரம் விற்கும்மரபு ரீதியான உரிமை யாரிடம் உள்ளது என்று கோயில் தர்மகர்த்தாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. ஏதிலிகளை துரத்தியடிக்கும் வேலைகள் வேண்டாமே.

இந்த ஏதிலிகள் இனவிகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் அல்ல. நாவற்குழி,முல்லைத்தீவு முகத்துவாரம், மகாவலி எல்வலயம் போன்ற விடயங்களில் காட்ட வேண்டியஅக்கறையை விட்டுவிட்டு ஏதிலிகளை துரத்த முனையும் போக்கை அரசியல்வாதிகள் கைவிடவிடவேண்டும். இன்னொரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். அண்மையில்ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழ்க்குடும் பம் ஒன்று நாடுகடந்தப்படவிருந்தபோது, அதற்குஎதிராக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மக்கள் கையெழுத்துப் போராட்டம்ஒன்றை நடத்தியிருந்தனர். ஏதிலிகளாக வந்தவர்கள் மீது வன்மம் பாராட்டாது அரவணைப்பதுஎன்பது மனிதத்தின் இயல்புகளில் ஒன்று.

அதை வந்தோரை வரவேற்கும் தமிழர் என்றுமார்தட்டிக் கொள்ளும் நாம் எட்டி உதைப்பது என்னவிதத்தில் நியாயம்?சமாதான காலத்தில்தென்னிலங்கையில் வெள்ளம் ஏற்பட்ட போது நிவாரணப் பொருட்களோடு, பலரை அனுப்பிவைத்தவர் பிரபாகரன். அவர் அனர்த்த விடயங்களில் இனபேதம் பார்ப்பவரல்ல. சுனாமிஅனர்த்தத்தின் போதும், தமிழர், முஸ்லிம் எனப் பாகுபாடு காட்டாமல் இயன்றவரையில்உதவுங்கள் என்றே தன்னால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குப் பணிந்திருந்தார்.

அவரால் வழி நடத்தப்பட்ட தமிழினம் போரில் தோற்றிருக்கலாம். மனிதாபிமானத்தில்தோற்கக்கூடாது. யார் இதனை ஏற்காவிட்டாலும், பிரபாகரனின் பெயரைச் சொல்லி அரசியல்நடத்த முனைவோர் இந்த விடயங்களை கவனத் தில் கொள்ளவேண்டும்.