Mar 26

8 ஆசிரிய கும்பலால் 13 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

ராஜஸ்தானில் 13 வயது மாணவி 8 ஆசிரியர்கள் கொண்ட கும்பலால் ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம்  ராஜஸ்தாணில் நடைபெற்றுள்ளது.

பிகானரின் நோகாவை சேர்ந்த மாணவி 2015ஆம் ஆண்டு தனியார் பாடசாலையில் 8 ஆசிரியர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் சிறப்பு வகுப்பு உள்ளதாக மாணவியை ஏமாற்றி வரவழைத்து அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளனர். இச்சம்பவத்தை அவர்கள் காணொளியும் எடுத்துள்ளனர்.

காணொளியை காட்டி சிறுமியை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர் என்று அவருடைய தந்தை கூறிஉள்ளார்.


கடந்த ஒரு வருடமாக சிறுமியை தொடர்ச்சியாக அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்  செய்து உள்ளனர் என எப்..ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்தினால் கர்ப்பம் அடைந்து உள்ளார், அப்போது மருந்துகளை கொடுத்து அவர்கள் கர்ப்பத்தை கலைத்து உள்ளனர் என்ற கொடூரமான சம்பவமும் நடந்துள்ளது.


கடந்த 2016ஆம் ஆண்டுதான் சிறுமி கொடூர துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு ள்ளார் என்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் தற்போது பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.