Jul 17

140 பயணிகளுடன் 'ஏர் கனடா' விமானம் பேராபத்திலிருந்து தப்பியது!

சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏர் கனடா விமானம் மற்றொரு விமானத்துடன் மோதிக் கொள்ளும் பேராபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியது.

சுமார் 140 பயணிகளுடன் பயணம் செய்த அந்த விமானம், ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு விமானத்திலிருந்து 30 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அது பறந்து என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டொரோன்டோவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற AC 759  விமானம் தரையிறங்கத் தயாரானது. அப்போது ஓடுபாதையில் இருந்த நான்கு விமானங்களை உரசிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதில் ஒரு விமானத்துடன் ஏர் கனடாவுக்கும் இருந்த இடைவெளி 30 மீட்டர் மட்டுமே என்று கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தவுடன் விமானி விமானத்தை மேலே ஏற்றியதால் ஏற்படவிருந்த மிகப்பெரிய இடர் தவிர்க்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.