Mar 26

டில்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம்; வைகோ நேரில் சென்று ஆதரவு

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் 14வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை 12வது நாளின் போது  போராட்டம்  3 விவசாயிகள் திடீரென்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். கையில் கயிற்றையும் வைத்து தூக்கு மாட்டிக் கொள்ளப்போவதாக எச்சரித்தனர்.  அவர்கள் 3 பேரையும் கீழே இறங்கும்படி ஏனைய  விவசாயிகள் சமாதானப்படுத்தினர். 

இருப்பினும்  அவர்கள் மத்திய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்இ எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். டில்லியில் விவசாயிகளை சந்திக்க நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர்.

அதேநேரம்  மதிமுக. பொதுசெயலாளர் வைகோ நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.