Jul 17

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ: மேலும் பலரை வெளியேறப் பணிப்பு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவி வரும் நிலையில், மேலும் பல மக்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே பல்வேறு இடங்களிலும் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், மின்னல் மற்றும் காற்றின் வேகம் என்பன அதிரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளமை, தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்பாக அங்கு காற்றின் வேகம் இந்த வார இறுதியில் மணிக்கு சுமார் 70கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படும் நிலையில், இந்த காற்றானது காட்டுத்தீப் பரவலை மேலும் வேகப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே கரிபூ மற்றும் தென் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களை எவ்வேளையிலும் வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

குறித்த இந்த கரிபூ பிராந்தியத்தில் மட்டும் சுமார் 60,000 மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீ காரணமாக தற்போது வரையில் சுமார் 17,400 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தற்போதய புதிய அதிகரிப்பு இந்த எண்ணிக்கையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுதக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.