May 25

கேட்டுக் கேள்வி இல்லாமல் அழிக்கப்படும் தமிழீழத்தின் பழைமையும், பெருமையும்

யாழ்ப்பாணம் அனலைதீவு காளி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் காணப்பட்ட நூற்றாண்டு காலம் பழைமைவாய்ந்த இரு மரங்கள் கனரக வாகனம் மூலம் வெட்டி வீழத்தப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியார்களுக்கு நீண்டகாலமாக நிழல் கொடுத்து வந்த இரு மரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாமல் தறித்து வீழ்த்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.