Jul 17

ஓவிய வேங்கை வீரசந்தானம் அவர்களுக்கு வணக்க நிகழ்வு -சுவிஸ்

தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும், பன்முகக் கலைஞருமான ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களின் நினைவுகள் சுமந்து வணக்க நிகழ்வு ஞாயிறு மாலை 18:30 மணிதமிழர் இல்லம் பேர்ண்மாநகரில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.