Mar 26

ரஜினி போனால் என்ன... மோடி போனால் என்ன? ஒரு பயனும் இல்லை

இலங்கைக்கு ரஜினி சென்றாலும் மோடி சென்றாலும் எந்த பயனும் இல்லை. தமிழர்களை ஒடுக்கினால் சர்வதேச அளவில் பிரச்சினைகள் வரும்' என்று சொல்லி இந்திய நாடு  இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால்தான் இலங்கை அரசாங்கம் பெயரளவுக்காவது தமிழர்களுக்கு நல்லது செய்யும்.


எனவே, இந்திய நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்தான் நாங்கள் இங்கிருந்து நம் இனத்துக்காக கத்திக் கொண்டிருக்கிறோம் ன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை குறித்த விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுவதாக செய்திகள் வந்த அடுத்த நாளே ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார் என்ற செய்தியும் வருகிறது. ஆனாலும் நான் உடனடியாக விசாரித்தேன்.

ரஜினி அப்படி எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்பது உறுதியானது. அதனால்தான் அதுபற்றி மேற்கொண்டு நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்றார்.