May 24

தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

கடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில வருடங்களாக பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயம் மக்கள் உணர்வுபூர்வமாக அறிகின்ற வகையில் இருந்து, அதன் பின்னர் படிப்படியாக அந்த விடயமானது மக்கள் மத்தியிலிருந்து அகன்றுவிட்டதற்கு நாட்டில் வளர்ச்சி பெற்று வந்திருந்த இயல்பு நிலைமைகள் காரணமாக இருந்திருக்கலாம்.

என்றாலும், எமது மக்களின்  சொந்த காணி, நிலங்களை விடுவிக்கக் கோரிய போதிலும், படையினரை அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ற வகையில் நிலை கொள்ளச் செய்யுமாறும், தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரிய போதிலும், காணாமல் போனோர் தொடர்பிலும் தேசிய பாதுகாப்பு என்ற விடயமே முன்வைக்கப்பட்டு வந்திருந்ததை நாம் மறந்து விடவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் -

நாங்கள் இத்தகைய கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்திருந்த போது, ஒரு விடயத்தை எப்போதும் அழுத்தமாகவே கூறியிருந்தோம். அதாவது, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறே நாம் வலியுறுத்தி வந்திருந்தோம் என்பதை நான் மீண்டும் இந்தச் சந்தர்ப்பத்திலே நினைவூட்ட விரும்புகின்றேன். தேசிய பாதுகாப்பும்,  தேசிய நல்லிணக்கமும் ஒன்றோடு ஒன்று பிணைந்ததாகும். இதில் ஒன்றைவிட்டு, இன்னொன்றை கட்டியெழுப்புவது என்பது சாத்தியமானதல்ல. இரண்டையும் சமமான வகையில் கட்டியெழுப்பியிருக்க வேண்டும். 

நாட்டில் உள்நாட்டு யுத்தமொன்று இடம்பெற்று, முடிவுற்றதன் பின்னரான காலகட்டத்தில் அதன் பிரதிபலனாக இரு வேறு இனங்களிடையே கசப்பான உணர்வுகள் பரவியிருந்த நிலையில், நிலை மாறு காலகட்டமாக அக்காலகட்டத்தை மாற்றுவதற்கு தேசிய நல்லிணக்கம் போன்ற வேலைத் திட்டங்கள் அவசியமாகும் என்றாலும், தேசிய பாதுகாப்பு என்பது நாட்டில் இனங்களுக்கிடையே சமத்துவம் சாதானம் உறுதிபடுத்தப்பட்டிருந்தால் தான் அது சாத்தியமாகும் என்பதற்கும் இந்த நாட்டில் நிறையவே பாடங்களை நாம் கற்றிருக்கின்றோம்.

என்றாலும், தேசிய பாதுகாப்பு என்ற வகையில் யுத்த முடிவுக்குப் பின்னர், வடக்கிலே தொடர்ந்தும் காட்டப்பட்டு வந்த கரிசனை என்கின்ற பெயரிலான ஏற்பாடுகள், எமது மக்களின் வாழ்க்கை முன்னெடுப்புகளில் பல்வேறு இடையூறுகளை  ஏற்படுத்தி வந்திருந்த நிலையிலும், மறுபக்கத்தில் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமான போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற செயற்பாடுகளும், சமூகச் சிர்கேடுகளான வாள் வெட்டுச் சம்பவங்களும், சிறு, சிறு கொள்ளைச் சம்பவங்களும் பெருவாரியாகவே தடுக்கப்படாத நிலைமையையும் காணக் கூடியதாகவே இருந்தது.

இத்தகைய வகையில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பாரதூரமான பொறுப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையிலேயே ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதன் பின்னரான நிலைமைகளை உடனடியாக கட்டுப்பாட்டக்குள் கொண்டு வர முடிந்ததையிட்டு, திருப்பதியடைய முடிகின்றது.

ஆனால், அதன் பின்னர் சில வாரங்கள் கழிந்த நிலையில், சிலாபம், மினுவாங்கொடை மற்றும் குருனாகல் மாவட்டத்தில் பல இடங்கள் என தொடர்ந்திருந்த வன்முறைகள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்த வன்முறைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் மக்கள் பாதுகாப்பு என்பது மூட்டை கட்டி ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்ததா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.

அதன் பின்னர், மீண்டும் கைதுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என தொடர்ந்திருந்ததையும் காணக் கூடியதாக இருக்கின்றது. தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் மக்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் என்பது தெளிவாகின்றது. தற்கொலைத் தாக்குதலில் அதிகம் உயிரிழந்த மக்கள் தரப்பினராக கிறிஸ்தவ மக்கள் இருந்துள்ளனர்.

மேற்படி தாக்குலானது மதவாதத் தாக்குதல் போன்ற தோற்றப்பாட்டினை எடுத்துக் காட்டினாலும், இதுவொரு சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதல் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள் இனவாதமான முறையில் தோற்றம் பெற்று வருவதை தடுப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.


வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் -

கடந்த காலங்களில் தங்களது சுயலாப பாசாங்கு அரசியலுக்காக வடக்கின் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஆடிக் கொண்டு வந்திருந்த கூத்தாட்டங்கள் காரணமாக அதிருப்தி கொண்ட நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் அந்த அதிருப்தியினை தங்கள் மீது காட்டுவதாகவே எமது மக்கள் அங்கலாய்த்து வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே, இது குறித்து அரசு அவதானத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை காட்டக் கூடிய சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலையை எவரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அதேநேரம், அப்பாவி மக்கள் எவராயினும் அம் மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

குறிப்பாக, முஸ்லிம் மக்களில் பலரும், பல்வேறு பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு வருவதாகவே அன்றாட ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இத்தகைய கைதுகளின்போது, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருந்தால், - அவர்களிடம் மேற்கொள்கின்ற விசாரணைகளின் பின்னர் அவர்கள் அப்பாவிகள் எனத் தெரியவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அதேநேரம், அத்தகைய அப்பாவிகளை கைது செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்ள வழிவகைளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், கடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் சிங்கள மக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அப்பாவிகளும் அடங்குகின்றனர் என பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலும் அவதானமெடுத்து, உண்மையிலேயே வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பில்லாதவர்களை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

இலங்கையின் இன்றைய நிலையில் மக்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை மேற்கொள்வதற்கான ஜீவனோபாயத்திற்காக எதை செய்வது என்ற நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அதற்குரிய வசதி வாய்ப்புகளை ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் -

நலிந்து போன மக்களின் நாளாந்த அவலங்கள் குறித்து தமிழ் கட்சி தலைமைகளில் பலருக்கும் அக்கறை இல்லாமால் இருக்கலாம். யாருக்கும் இல்லாத அக்கறை எனக்கு மட்டும் இருப்பது ஏன் என்று கேட்பீர்கள்!. அன்று எரிந்து போன எம் தேசத்தில் நலிந்து போன எமது மக்களுடன் கூடவே வாழ்ந்தவன் நான். அழிவு யுத்தத்தின் போது வலிகளையும் வதைகளையும் சுமந்த எமது மக்களின் அவலங்களை துடைத்த அனுபவங்களால்,.. நானே அந்த பாதிப்புகளின் வலிகளை உணர்ந்த வரலாறு எனக்கு உண்டு.

இனியுமொரு வன்முறையும் அதன் வலிகளும் எமது மக்களை வந்து சூழும் கொடுமைகளை நாம் சகித்துக்கொண்டிருக்க முடியாது. போராட்டம் வெடிக்கும் என்று சும்மா போலியாக உசுப்பேற்றி சூளுரைக்கும் சுயலாப பல தமிழ் அரசியல்வாதிகளுக்கு உயிர்த்த ஞாயிறு வன்முறைகள் நிச்சயமாக இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

குண்டு வெடிப்புகள் நடந்த குருதியின் ஈரம் காயுமுன்னரே அவர்கள் விடுத்த அறிக்கையில் நடந்த வன்முறைகளால் அரசியல் தீர்வு முயற்சிகள் பாதிப்படைந்து விட்டன என்றும், அரசியல் தீர்வை பேரம் பேசி பெற முடிந்த போதிய அரசியல் பலம் அவர்களிடம் இருந்தும், அதை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத அவர்களின் குற்றமா?. அல்லது, அதனோடு சம்பந்தமே இல்லாத குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகளின் குற்றமா?... படையினரை வெளியேற்றியே தீருவோம் எனச் சூழுரைத்து தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள்.  அது அவர்களின் குற்றமா?.. அல்லது குண்டு வெடிப்புகள் நடந்தவுடன் படையினர் எம் மண்ணில் இருந்து வெளியேறக்கூடாது என்று அவர்களே கூறி வரும் அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் தனத்தின் குற்றமா?..

சொந்த மக்களின் பெயரை சொல்லி சுயலாப அரசியல் நடத்துவோர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். அரசியல் தீர்வை பெற்று தருவோம்,. படையினரை வெளியேற்றுவோம் அது செய்வோம்... இது செய்வோம் என்று,... தம்மால் அவைகள் முடியாததைக் கூறி அம்பலப்பட்டவுடன் அதற்கான போலி நியாயங்களை அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். உயிர்த்த ஞாயிறு வன்முறைகள், தமிழரின் உரிமைகளை பெற்றுத்தருவோம் என கூச்சலிடுவோருக்குத் தப்பித்து கொள்ளும் காரணங்களில் ஒன்றாகவே அமைந்து விட்டது...

கடந்த ஏப்பரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னரான பல்துறை சார்ந்த வீழ்ச்சி நிலையின் காரணத்தால், வாழ்வாதாரங்கள் இழந்து தவி

அப் பணியகம் ஊடாக மக்களின் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அம் மக்களின் இழப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த அரசு முன்வர வேண்டியது உடனடி அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அதாவது, தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயமடைந்தோருக்கும், அதன் பின்னரான வன்முறைத் தாக்குதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கும் போன்றே இதனால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தொழில்வாய்ப்புகளைக் கொண்டிருந்த அனைவருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டிய தேவையை இங்கு வலியுறுத்துனின்றேன்.