Mar 26

தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது; நாமல் காட்டம்

வவுனியாவில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தபோதும் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்து அவர் அப்பயணத்தை மேற்கொள்ளப்போவதில்லை எனஅறிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ டைம்ஸ் நைவ் தொலைக்காட்சிக்கு தொலைபேசியூடாக வழங்கிய செவ்வியில் காட்டமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள். 

அவர்கள் தமது அரசியலுக்காகவே போராட்டங்களையும் தமிழர்கள் மீதான அக்கறையான கருத்துக்களையும் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் தேர்தல் காலங்களில் தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலும் கருத்துக்கள் அதிகமாக வரும்.

வெறுமனே தேர்தல் பிரசாரப்பொருளாகவே அவர்கள் எமது தமிழ் மக்களை பார்க்கின்றார்கள் என்றார்.