May 23

அரச கரும மொழி தினமாக ஜூன் 3 ஆம் திகதியை பிரகடனப்படுத்த தீர்மானம்!

அரச கரும மொழி தினமாக எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள், சமூகக் கொள்கை மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒவ்வொரு வருடமும் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஒருவாரகாலத்தை அரச கரும மொழி வாரமாக கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூகக் கொள்கை மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.