May 23

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் கைக்குண்டு மீட்பு..

இன்று காலை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் அவை வைக்கப்பட்டிந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.