Mar 26

இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கமாட்டோம்; சந்திரிகா

நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து நாட்டைப் பாது­காத்த எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரை யும் சட்­டத்தின் முன் நிறுத்த போவ­தில்லை என தெரிவித்­துள்ள நல்­லி­ணக்­கத்­துக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் பொறுப்பான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமாரதுங்க தெரி­வித்­ துள்ளார்.

தெல்­லிப்­பளை பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்ட அவர்   உரையாற்றுகையில்,

காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ளது. அதே­போன்று இரா­ணுவம் போரின் போது கைப்­பற்­றிய மக்­க­ளது காணி­களை மீள மக்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டி­யுள்­ளது.

அந்­த­வ­கையில் காணாமல் போனோர் தொடர்­பாக தீர்க்­க­மான செயல்திறன் மிக்க தீர்­வொன்றை முன்­வைப்­ப­தற்கு அர­சாங்கம் மக்களுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வாக்­கு­று­தியை கொடுத்­துள்­ளது. இதற்க­மைய பாது­காப்பு அமைச்சுஇ இரா­ணுவம் பொலிஸ் ஆகியோருடன் பேசி ஒரு திட்டத்தை தயா­ரித்­துள்ளோம்.

இதன்­படி யார் யார் காணமல் போனார்கள் என்­பது தொடர்­பான பட்டியல் ஒன்றை உரு­வாக்கி இதற்­கான சட்­டங்­களை பாரா­ளு­மன்றம் ஊடாக நிறை­வேற்­றி­யுள்ளோம். தற்­போது அச் சட்­ட­மா­னது ஜனாதிபதியின் கையொப்­பத்­துடன் சட்­ட­மாக நடமுறைப்படுத்தப்படவுள்­ளது.

ஆனால் இது இல­கு­வான காரி­ய­மாக அமை­ய­வில்லை. காரணம் முன்னாள் ஜனா­தி­பதி ஒருவர் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக நாட்டின் ஒற்­று­மையை குழப்­பிக்­கொண்­டி­ருக்­கிறார்.

இவர் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டி போராட்­டங்­களை நடாத்திக்கொண்டிருக்கிறார்.இப்­ப­டி­யான நிலை­யிலும் கூட நாம் இச்சட்­டத்தை நிறை­வேற்­றி­யி­ருந்தோம்.

ஆனால் நாம் இச்­சட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­த­னூ­டாக இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கண்டு அவர்­களை தண்­டிக்கப் போவ­தில்லை. உண்­மையில் காணாமல் போன­வர்கள் தொடர்­பாக அவர்­க­ளது உறவினர்கள் கோரு­வது காணாமல் போன­வர்கள் எவ்­வாறு காணாமல் போனார்கள் என்ற தக­வலை மட்­டுமே இரா­ணு­வத்­திற்கு தண்­டனை வழங்க வேண்டும் என கோர­வில்லை. 

போர்க்­கா­லத்தை தவிர்த்து மக்­களை கொன்­ற­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும். மேலும் இந் நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து நாட்டை பாது­காத்த இரா­ணுவ வீரர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக்கி தண்­ட­னையை நாம் வழங்க மாட்டோம்.

நாட்டில் யுத்தம் நடந்த போது நாட்டில் இல்­லாது வெளி­நா­டு­களில் வாழ்ந்த புலம்­பெ­யர்ந்த மக்கள்இ புலம்­பெயர் அமைப்­புக்கள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் கூறு­வது போன்று நாம் எத­னையும் செய்­து­விட முடி­யாது என்றார்.