May 21

தேடகம் 30ஆவது ஆண்டு நிறைவு !!!




தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) இவ் ஆண்டு 30ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, ஜனநாயக உரிமை, மனித உரிமைகளுக்காக தேடகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, மானிட மேன்மைக்காக கனேடிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் கை கோர்த்து தொடர்ந்தும் பணியாற்றி வருகிறது. 

தமிழர் வகைதுறைவள நிலையம், தேடகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அரங்க அளிக்கையொன்றை எதிர்வரும் யூன் மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு  Yorkwoods Liabrary Theatre அரங்கில் நிகழ்த்தவிருக்கிறது. இவ் நிகழ்வில் கனடாவின் முன்னணி இளம் கலைஞர்களில் ஒருவரான சஹானா சிவகுமாரனின் இன்னிசை நிகழ்வும், தமிழின் முன்னணி நாடக ஆசிரியர்களில் ஒருவரான கனேடிய நாடகர் பா. அ. ஜயகரனின் 'உள்ளிருந்து' நாடகமும் மேடையேறவுள்ளன.

இவ் நிகழ்வுக்கான உங்கள் ஆதரவை கோரி நிற்கிறோம். இவ் நிகழ்வு தொடர்பான விபரங்களை செய்தியாகவோ அல்லது அறிவித்தல்களாகவோ உங்கள் வாசகர்கள், நேயர்களுக்கு அறியத்தந்து உதவுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு 
ராதாகிருஸ்ணன்:- 416 553 2033, ஜயகரன் 416 275 0070

நன்றி