May 20

கிழக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முனெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் காந்திபூங்கா முன்பாக இன்று காலை நடைபெற்றது.

போராட்டமானது தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசசபை, மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.