May 20

பருத்தித்துறை வாகன விபத்து ; இருவர் படுகாயம்

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்று இரவு  7:20 மணியளவில் படிரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மயூரன் 13 வயது மற்றும் ஐங்கரன் 18 வயது  ஆகியோர் காயமடைந்துள்ளார் 


காயமடைந்த மயூரன் மற்றும் ஐங்கரன் ஆகியோர் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

மருதங்கேணி பகுதியிலிருந்து தமது வீட்டிற்கு பருத்தித்துறை தம்பசிட்டி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த வேளை குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்துடன் மோதியதில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

நான்கு பேர் பயணித்த குறித்த வாகனத்தில் பின்னால் இருந்த இருவருமே படுகாயம் அடைந்துள்ளனர்