Jul 15

கிரென்பெல் கட்டட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம்

கிரென்பெல் கட்டட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் இறுதி ஊர்வலங்கள் லண்டனில் நடைபெற்றன.

நேற்று (வெள்ளிக்கிழமை) பாட்டர்சீ பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட குறித்த இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு இறுதி மரியாதையையும் செலுத்தியுள்ளனர்.

மேற்படி இறுதி ஊர்வலத்தில் லண்டன் மேயர் சாதிக் கானும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஏற்பட்ட குறித்த விபத்தில் சிக்கி, 80 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

குறித்த அடுக்குமாடி கட்டடத்தில் பூசப்பட்டிருந்த உலோகப்பூச்சு எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியதாக காணப்பட்டமையே இந்த தீ விபத்து ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.