Jul 15

பிரான்ஸ் தேசிய தின நிகழ்வு: ஈபிள் கோபுரத்திற்கு மேலாக வானவேடிக்கை

பிரான்ஸில் நடத்தப்பட்ட தேசிய தின நிகழ்வுகளை நிறைவு செய்யம் வகையில் ஈபிள் கோபுரத்திற்கு மேலாக வியத்தகு வானவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தேசிய தின நிகழ்வின் இறுதி அங்கமாகவே குறித்த வான வேடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று பிரான்ஸில் விடுமுறை அளிக்கப்பட்டிருந் நிலையில் பலர் குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். முதலாம் உலகப் போரில் அமெரிக்கா பங்கேற்று நேற்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியடைந்த அதே வேளை, தேசிய தினத்தை கொண்டாடிய பிரான்ஸ் துருப்புக்களுடன் அமெரிக்க துருப்புக்களும் இணைந்து அணிவகுத்து சென்றனர்.

இந்த நிகழ்வின் போது, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு 63 விமானங்கள் சாகசங்களையும் நிகழ்த்தின.