May 19

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு


கோகாலை - தம்புல்கமுவ வீதியின் அட்டக்காகஹமுல கந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் உள்ள வாய்கால் ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

தம்புல்கமுவ பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கடந்த 14 ஆம் திகதி வீட்டில் இருந்து சென்றுள்ளதாகவும் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கோகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.