Mar 25

இராணுவ மருத்துவமனையில் முபாரக் இருந்து விடுதலை

எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஆட்சியாளரான கொஸ்னி முபாரக் சுமார் 29 ஆண்டுகள் அந்த நாட்டை ஆட்சி செய்தார். 

கடந்த 2011ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அதை ஒடுக்க முபாரக் இராணுவ நட வடிக்கைகளை மேற்கொண்டார். இதில் 850 பேர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் கடந்த 2012இல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி அவரை விடுதலை செய்தது. முதுமை காரணமாக கெய்ரோவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் முபாரக் சிகிச்சை பெற்று வந்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் அவர் இராணுவ மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்குத் திரும்பினார்.