May 18

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 762 சிறைக்கைதிகள் விடுதலை


வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி  பொது மன்னிப்பின் கீழ் 762  சிறைகைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில் 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைகைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.