Mar 25

இராணுவ நடவடிக்கைகக்காக செயற்கைத்தீவுகளை உருவாக்கவில்லை

தென்சீனக் கடலில் இராணுவ நடவடிக்கைகளுக்காக செயற்கை தீவுகளை உருவாக்கவில்லை. மக்கள் பயன்பாட்டுக்காகவே அவற்றை அமைத்துள்ளோம் என்று சீன பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார

சீன பிரதமர் லீ கெகியாங் தற்போது ஆவுஸ்திரேலியாவிங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிட்னி நகரில் அந்த நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் ஊடகங்களிடத்தில் தெரிவித்துள்ளதாவது, 

தென் சீனக் கடலில் இராணுவ நடவடிக்கைகளுக்காக செயற்கை தீவுகளை உருவாக்கவில்லை. மக்கள் பயன்பாட்டுக்காகவே அவற்றை அமைத்துள்ளோம். செயற்கை தீவுகளில் சில இராணுவ தளவாடங்கள் உள்ளன. அவை பாதுகாப்புக்காகவே நிறுவப்பட்டுள்ளன.

தென்சீனக் கடலின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். அங்கு எந்த அசம்பாவிதம் நேரிட்டாலும் சீனாவே முதலில் பாதிக்கப்படும். எனவே பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.