Mar 25

தலாய்லாமைச் சந்தித்து ஆஸி.வீரர்கள் ஆசீர்வாதம்

தர்மசலாவில் உள்ள ஆவுஸ்திரேலிய அணியினர் அங்குள்ள மெக்லியாட் கஞ்சில் திபெத் லாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்

சந்திப்பு பற்றி ஸ்மித் கூறும்போது, இது மிக அருமை. நான் அவரிடம் நிம்மதியான உறக்கம் பற்றியும் அதற்கு அவர் எப்படி எனக்கு உதவ முடியும் என்று கேட்டேன், அவர் என்னை ஆசீர்வதித்தார். 

திபெத் கலாச்சாரத்தின் படி நானும் அவரும் ஒருவரையொருவர் மூக்கால் உரசிக் கொண்டோம், அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார், இது எனக்கு அடுத்த 5 நாட்களுக்கான நிம்மதியான உறக்கத்தை வழங்கு என்று எதிரபார்க்கிறேன் என்றார்  

ஏற்கனவே 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது தலாய்லாமாவை ஆவுஸ்திரேலிய அணியினர் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது கைகூடியிருக்கவில்லை.