May 15

சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தற்போது உணர்ச்சிவசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இந்த நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் வகையில் அரசியல் தலைவர்கள் செயற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது அரசியல் தலைவர்களின் கடமை. அதற்கமைய இத்தருணத்தில் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது முக்கியமானதாகும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.