Mar 25

விமலுக்காக கவலைப்படும் மகிந்த மக்கள் பலம் உள்ளதென்கிறார்

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமையப்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கினார்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீண்ட நாட்களாக பிணை வழங்கப்படாமல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவர் நியாயமான காரணங்களை முன்வைத்து பிணை கோரியபோதும் அது மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

ஆகவே அவரின் விடயம் தொடர்பில் மக்கள் தற்போது மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளனர். விமல் வீரவன்சவின் கைதைத் தொடர்ந்து அவர் பக்கம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். அதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுபவர்களைத் பழிங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பழிவாங்கும் செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்கிவிட முடியாது. ஏனெனில் மக்கள் பலம் எமக்குள்ளது என்றார்.